புதுப்பிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் மண்டல தணிக்கை அலுவலகம் திறக்கப்பட்டது
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள உள்ளூர்(ராணுவம்) மற்றும் மண்டல தணிக்கை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. சென்னை பாதுகாப்பு கணக்குத் துறையின் கட்டுப்பாட்டாளர் நிர்வாகத்தின் கீழ் 1988 ஆம் ஆண்டு இந்த அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.
280 வருடங்களுக்கும் மேலான பழமையான இந்த கட்டிடம் 1730 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டது. போர்க்கால அடிப்படையில் இந்த அலுவலகத்தின் புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவு செய்யப்பட்டது
புதுப்பிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தை சென்னை பாதுகாப்பு கணக்கு துறை கட்டுப்பாட்டாளர் திரு.டீ.ஜெயசீலன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.
கருத்துகள்