தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன்- மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்தவர் ஆழ்வார்பேட்டையிலுள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது இருவரும் அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது. சந்திக்க வந்த மம்தா பானர்ஜியை முதல்வர் வரவேற்றார். இதையடுத்து இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பில் தற்போதுள்ள தேசிய அரசியல் நிலவரம் ,
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்குவங்காளத்தின் பொறுப்பு ஆளுநருமான மூத்த தலைவர் இல.கணேசன் இல்லத்து நிகழ்வில் பங்கேற்க சென்னை வந்த மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கோடம்பாக்கம் ஆற்காடு சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இல.கணேசனின் உடன்பிறந்த மூத்த அண்ணனின் 80 வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க மம்தா பானர்ஜி,சென்றார் மண்டப வாயிலில் செண்டை மேளம் வாசித்த இசை கலைஞர்களைக் கண்டு ரசித்தார்.
பின் யாரும் எதிர்பாராத விதமாக செண்டை மேளத்தை வாங்கிய மம்தா பானர்ஜி, கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அங்குள்ளவர்களை உற்சாகமாக்கியது. மேலும் ஆளுநர் இல.கணேசன் அண்ணன் 80 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேசப் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்,
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசிக்கும் வீடியோ தற்போது இணைய தளத்தில் பரவி வருகிறது.
.நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான ஸ்டைலில் வேகமாக நடந்து விழா மண்டபத்திற்குள் சென்றார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கட்சி பேதமின்றி இல. கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில் பங்கேற்றுள்ளனர்.
கருத்துகள்