தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 90-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி ஸ்டேடியத்திலுள்ள அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் தேர்தல் ஆணைய முன்னாள் ஆணையர் டி.டி.சந்திரசேகரன் தேர்தல் அதிகாரியாக இருந்து . தலைவர் இணை செயலாளர், உதவிச் செயலாளர் பதவிகளுக்கு போட்டி நிலவியதால்
அந்தப் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த எஸ்.பிரபு, ஸ்ரீதுர்காம்புடி சிவகேசவ ரெட்டி, காளிதாஸ் வாண்டையார் ஆகியோர் தங்களது மனுக்களை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் மூன்றாண்டுகளாகும்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக டாக்டர் பி.அசோக் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சர் பொன்முடியின் மகனாவார். ஆடம் சேட் துணைத்தலைவராகவும், ஆர்.ஐ. பழனி செயலாளராகவும், கே.சிவகுமார் இணைச் செயலாளராகவும், டாக்டர் ஆர்.என்.பாபா உதவிச் செயலாளராகவும், ஸ்ரீனிவாசராஜ் பொருளாளராகவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
உயர்மட்டக் கமிட்டி உறுப்பினர்களாக ஒன்பது நபர்கள் தேர்வானார்கள். நிர்வாகக் கவுன்சில் பிரதிநிதிகளாக ஆனந்த், பிரதிஷ் வேதாப்புடி, ஜாபர் ஆசிக் அலி ஆகியோரும், கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களாக கிரிஷ், மாதவன், சுதா ஷா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும் பிசிசிஐ தலைவருமான ஜெய்ஷாவின் ஆதரவு பெற்றவராக கூறப்படும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இளைய மகன் டாக்டர் அசோக் சிகாமணி மற்றும் அவரை எதிர்த்து எஸ்.பிரபு ஆகியோர் களத்திலிருந்த நிலையில், நடந்து முடிந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலில் ஓட்டுக்கு 15 லட்சம் வரை புழக்கமாகி ஒரே திருவிழா தான் என பலரும் பேசுவது காதில் விழுந்தாலும், அது விளையாட்டுத் தான் ஆனால் விலையானது . பி.சி.சி.ஐ தலைவர் அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா மற்றும் உயர்வகுப்பு வாக்கு வங்கியை உத்தரவாதமாக்கிய டி வி எஸ் ஐயங்கார் பேரன் வேனு சீனிவாசன் ஆதரவாலும், அமைச்சர் பொன்முடி மகன் டாக்டர் அசோக் சிகாமணி களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.
உயர் ஜாதி அந்தணர்கள் மட்டுமே கோலோச்சிய சங்கத்தின் இடத்தில் இந்த முறை பதவி அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணி தலைவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பல ஆண்டுகளாக மன்னராக விளங்கிய சீனிவாசன் தலைவரானது முதல் பல்லாயிரம் கோடி வருமானத்தை ஈட்டித் தரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு தமிழ்நாடு அரசிற்கான வாடகைப் பணத்தைக் கூட ஒழுங்காகக் கட்டவில்லை என்ற புகாரும் உண்டு. இன்று வரை சில ஆயிரம் கோடிகள் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் இழப்புத்தான் !
உலகிலேயே அதிகப் பணப் புழக்கம் விளையாட்டாகத் திகழ்வது கிரிக்கெட் அதுவும் சூதாகமாறிய நிலையில், அதிலும் பல லட்சம் கோடி பணம் புழங்கும் விளையாட்டமைப்பு இந்தியக் கிரிக்கெட் வாரியம்! அதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அகில இந்தியாவையும் மிரள வைக்கும் பலம் பொருந்தியது! இதில் நடக்கும் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் பஞ்சமேயில்லை! வருமானங்களோ பல்லாயிரம் கோடிகள்! ஒரு மெழுகுவர்த்தி தயாரிக்கும் குடிசை தொழிலுக்கு கூட ஜி.எஸ்.டி வரியில் பாதிப்பு நிலை மத்திய அரசு, இந்த கிரிக்கெட் விளையாட்டு வருமானத்திற்கு மாத்திரம் வரி விலக்கு அளித்துள்ளது என்பதே உண்மை. கிரிக்கெட் சம்பந்தமாக
‘யாரும் கேள்வி கேட்க முடியாது, கேட்டாலும் செல்லுபடியாகாது, அரசாங்கமோ, நீதிமன்றங்களோ கூட எங்களை நிர்பந்திக்க முடியாது’ எனச் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலில் தான் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 15 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு உள்ளதாகத் பேசப்படும் தகவல் வருகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் 27 மாவட்டக் கிரிக்கெட் சங்கங்களும், கிளப்புகளும் உள்ளன! அந்த வகையில் மொத்தம் 177 பேர் இந்த சங்கத்தில் ஓட்டுப் போடும் உரிமையுள்ளவர்களாக உள்ளனர். இவர்களின் ஓட்டை அள்ளத் தான் இந்த 15 லட்சம் ! இதற்காக நாள்தோறும் விருந்துகளும் நடந்ததாம்!
2018 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் மேக்ஸ் பிக்சிங் சூதாட்டம் பெரிய அளவு வெளிச்சத்திற்கு வந்ததில் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் பெரிய அளவில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொண்டார்! அவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஒ வாகவும் இருந்தார். சூப்பர் கிங்ஸ் அணி மூலமாகவே பல நூறு கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், பேராசைப்பட்டு சூதாட்டத்திற்கு துணை போவதன் மூலம் மேலும் பல நூறு கோடியை ஈட்டி வந்ததாகவும் சீனிவாசன் மருமகனின் சாமார்த்தியம் கண்டு புளகாங்கிதத்தில் மிதந்து கொண்டிருந்த சீனிவாசன், விவகாரம் அம்பலப்பட்டு உச்சநீதிமன்றம் போனதும், ‘’என் மருமகனுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் ஒரு கிரிக்கெட் ஆர்வலர் அவ்வளவு தான்’’ என ஒரே போடாகக் போட்டார்! ஆனால் நீதிபதிகள் அதை நம்பத் தயாராகயில்லை.
குருநாத் மெய்யப்பன் வழக்கை விசாரித்த நீதிபதிகள். இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் நடவடிக்கைகள் மிக வெட்கப்பட வேண்டியதாக உள்ளதெனக் கூறி சீனிவாசன் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டனர். நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் சீனிவாசன் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும். மறுக்கும் பட்சத்தில் நாங்களே ஆணை பிறப்பிக்க வேண்டியதிருக்கும். பதவி விலகும் வரை சீனிவாசன் தரப்பின் வாதங்கள் எதையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. இவர் பதவி விலகாமல் இருப்பது அருவருக்கத்தக்கது. ஏன் இவர் இன்னும் இந்த நாற்காலியில் இருக்க விரும்புகிறார் ? என கோபமாகக் கேட்டனர்.
அது மட்டுமின்றி இந்தியக் கிரிக்கெட் வாரியத்திலும், மாநிலக் கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய “லோதா கமிட்டி” பரிந்துரைத்தது உச்ச நீதிமன்றம். அதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியிலிருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தால், அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு மீண்டும் வர முடியும். கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்கக்கூடாது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்ததன்படி தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம், இந்தியக் கிரிக்கெட் வாரியம் , சர்வதேச கிரிக்கெட் அமைப்பு என அனைத்திலும் தலைமை வகித்த சீனிவாசனின் ஆதிக்கத்திற்கு முற்றுபுள்ளி வைத்த நிலை. ஆனால் இன்னும் இங்கே சீனிவாசன் தான் முடிசூடா மன்னர்.
அவர் தான் தலைவராக முடியாத நிலையில் தன் மகள் ரூபா குருநாத்தை 2019 ஆம் ஆண்டில் போட்டியின்றித் தலைவராக்கினார்.
சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு போல மும்பையிலோ, கொல்கத்தாவிலோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அங்கே தேர்தல்கள் நடக்கும். அதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்களும் இருக்கும். உதாரணத்திற்கு தற்போது மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில் சரத்பவாரும், தேவேந்திர பட்னாவிஸும், ஏக் நாத் ஷிண்டேவும் ஒரு வேட்பாளரைக் கூட்டாக நிறுத்தியுள்ளனர். இவர்களை எதிர்த்து நிற்பவர் கிரிக்கெட் வீரர் சந்தீப் பட்டேல். ஆனால், அங்கே எந்த அரசியல் தலைவரோ, கட்சிகளோ வர முடியாதபடிக்கு தன்னுடைய இரும்புக் கோட்டையாக தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தை வைத்துள்ளார் சீனிவாசன். என்பதே உண்மை.
அதற்கு முக்கியக் காரணம் அவர் சார்ந்த உயர்வகுப்பு உறுப்பினர்களின் ஓட்டுகள் என்றும் சொல்லலாம்! உண்மையில் இந்தச் சங்கத்தில் உள்ள நிறைய அந்தணர்களே சீனிவாசனின் கோல்மால் பிடிக்காமல் வெளியேறி விட்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனாலும் தற்போது 50 ஓட்டுகள் மட்டுமே இருக்கிறது. அத்துடன் அவருக்கு ஆளும் திமுகவின் ஆதரவும் கிடைத்துள்ளது. ஆகவே, தற்போது அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணியை தலைவராக்கி தன் அதிகாரத்தை செலுத்தும் வகையில் வெற்றி பெற வைத்துள்ளார் என்ற பேச்சும் நிலவுகிறது.
இந்தியா சிமெண்ட் சீனிவாசன், ஆதரவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணி
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் விழுப்புரம் மாவட்டக் கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் இருக்கும் நிலையில் லோதா கமிட்டி வகுத்த விதிமுறைப்படி தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தியும், அமைச்சர் பொன்முடியின் மகன் என்ற காரணத்தைச் சொல்லியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் தான் பி.சி.சி.ஐ. யின் தலைவராக உள்ளார் என்ற வகையிலும் அரசியல் ரீதியாகவும் காய்களை நகர்த்தித் தான் நினைத்ததைச் சாதிக்கிறார் சீனிவாசன் ஒரு ஓட்டுக்குப் 15 லட்சம் என்பது அவருக்கு ஒரு மாலை நேர தேனீர் செலவைவிடக் குறைவான தொகையே!
எம்.ஏ.எம். ராமசாமி தலைவராக இருந்த போது ஓரளவு ஊழல் தான் பரவாயில்லை. ஆனால், இந்தியா சிமெண்ட் சீனிவாசன் வந்த பிறகு இது ஊழல் சாம்ராஜ்யமாகிவிட்டது! இத்தனைக்கும் எம்.ஏ.எம்.ராமசாமியால் உள்ளே வந்தவர் தான் இந்த சீனிவாசன். பிறகு அவரையே காலி செய்து தலைமைப் பதவிக்கு வந்துவிட்டார்! அப்புறம் இவரை அசைக்க முடியவில்லை. சுமார் 15 முறை மீண்டும், மீண்டும் இவரே தலைவரானார்! பிறகு தன் மகளைத் தலைவராக்கினார். தற்போது அவரே அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் அசோக் சிகாமணியை வெற்றிபெற வைத்துள்ளார்! அவரது விரலைசைவை மீறி டாக்டர் அசோக் சிகாமணியால் செயல்பட முடியுமா என்பதே பலரது எழுவினா? . ஏனென்றால், கவாஸ்கர் பி.சி.சி.ஐ தலைவரான போது அவரையே தன் விரலசைவில் வைத்தவர் சீனிவாசன் தான் என்பதும் தற்போது எதிர்த்து நிற்கும் பிரபு வெற்றி பெற்றாலும் ஒரளவு மாற்றங்கள் நடக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பு குறைவு” அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா நினைத்தால், லோதா கமிட்டி விதிமுறையைக் காட்டி டாக்டர் அசோக் சிகாமணி போட்டியிடுவதையே நிராகரித்திருக்க முடியும். ஆனால், நிராகரிக்கவில்லை.! ஆக, திமுகவின் பாஜக எதிர்ப்பு என்பதெல்லாம் வெற்று அரசியல் முழக்கம் தான் என பல கட்சிகள் தற்போது பேசுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் மிகச் சிறந்த உதாரணமாக அமைகிறது. 1932 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட லீக் கிரிக்கெட் தொடங்கிய. போது வாரியம் உருவாக்கப்பட்டது. இது இரண்டு போட்டி அமைப்புகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது: இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஆகியவை மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் (எம்.சி.ஏ.) ஆனது.
மெட்ராஸ் கிரிக்கெட் அசோசியேஷன் (எம்.சி.ஏ.) முறைப்படி ஏப்ரல் 30, 1935 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு சங்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைக்கப்பட்டது. கிரிக்கெட் சங்கம் மாகாணத்தில் பிரதிநிதித்துவ கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்த வேண்டும்.
1933-34 வாக்கில், சங்கம் முதல் மற்றும் இரண்டாம் பிரிவு லீக்குகளைக் கொண்டிருந்தது, அடுத்த பருவத்தில் மூன்றாவது பிரிவு சேர்க்கப்பட்டது. 1939-40 வாக்கில், அது நான்காவது பிரிவைச் சேர்த்தது.
1967-68 பருவத்தில், எம்.சி.ஏ. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2008 வரை, மொத்தம் 132 அணிகளுடன் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருந்தது.
கருத்துகள்