2022 ஆம் ஆண்டு பசுமை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் ரூ. 2218 கோடி மதிப்பில் 46 புதிய திட்டங்களுக்கு அனுமதி
உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
2022-ம் ஆண்டில் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டம்
2022-ம் ஆண்டில் உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் சாதனைகளில் சில:
பசுமை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் ரூ. 2218 கோடி மதிப்பில் 46 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 2021-22-ம் நிதியாண்டில் 10.42 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டில் 8.56 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது.
பிரதமரின் குறு உணவுப்பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்ட அடிப்படையில் 12 பிராண்ட் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறையின் உற்பத்தியுடன் கூடிய .ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற 182 விண்ணப்பங்களுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 30 விண்ணப்பங்கள் சிறுதானியப் பொருட்கள் அடிப்படையிலான விண்ணப்பங்கள் ஆகும்.
விடுதலைப் பெருவிழாவின் 75-வது ஆண்டை முன்னிட்டு 75 உணவுப்பதப்படுத்துதல் திட்டங்களை மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட 112 உணவுப்பதப்படுத்துதல் திட்டங்களின் மூலம் கூடுதலாக 23 லட்சத்து எட்டாயிரம் மெட்ரிக் டன் வேளாண் பொருட்களை ஒவ்வோர் ஆண்டும் பாதுகாக்க முடியும்.
புதிதாக நிறைவேற்றப்பட்ட 15 குளிர்பதன திட்டங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 23 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பாலைச் சேமித்து பதப்படுத்த முடியும்.
23 வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் மையங்கள், 33 குளிர்பதன மையங்கள், இரண்டு உணவுப் பூங்காக்கள், 12 உணவு சோதனை ஆய்வகங்கள் உள்ளிட்ட 190 திட்டங்களுக்கு புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்திட்டத்தின் கீழ் 10,900 கோடி ரூபாய் அளவுக்குத் திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பதப்படுத்துதல் தொழில்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், சத்திஷ்கர், ஜார்க்கண்ட், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், மிசோரம், மணிப்பூர், சிக்கியம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இவற்றில் விவசாயிகள், தொழில்முனைவோர், உணவுத் தொடர்பான நிறுவனத்தினர், வங்கியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
ஏப்ரல் 2022-ல் உணவுப்பதப்படுத்துதல் அமைச்சகம் ஆகார் 2022 என்ற பெயரில் சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை நடத்தியது.
2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க 15 நாள் சமூக வளைதளப் பிரச்சார இயக்கத்தை உணவுப்பதப்படுத்துதல் இயக்கத்தை அமைச்சகம் நடத்தியது.
ஹரியானா மற்றும் தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் உணவுப்பதப்படுத்துதல் தொடர்பான கல்வியைச் சிறப்பாக வழங்கி வருவதுடன் பயிற்சி மற்றும் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கருத்துகள்