ஏடிஎல் மாரத்தான் 2022-23: அடல் புத்தாக்க இயக்கம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
அடல் புத்தாக்க இயக்க ஆய்வகத் திட்டத்தின் கீழ் புதுமை கண்டுபிடிப்புகள் சவால்களுக்கான ‘ஏடிஎல் மாரத்தான் 2022-23’ போட்டிக்கு நித்திஆயோக் அடல் புத்தாக்க இயக்கம் இன்று முதல் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஏடிஎல் மாரத்தான் என்பது நாட்டில் சமுதாயப் பிரச்சனைகளைக் களையும் வகையில் இளைய புதுமைக் கண்டுபிடிப்பாளர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான புதுமைக் கண்டுபிடிப்புகள் போட்டி ஆகும்.
கடந்த முறை நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 7000க்கும் மேற்பட்ட புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதன்மையான 350 பேருக்கு முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம் மூலம் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு நடத்தப்படும் ஏடிஎல் மாரத்தான் போட்டியின் கருப்பொருள் ‘ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம்’ என்பதாகும். இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏடிஎல் மாரத்தான் 2022-23 போட்டியிலும் இந்தி மொழியிலும் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் மாணவர்களுக்கு கிடைக்கும். இரண்டு மொழிகளிலும் அவர்கள் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம்.
கல்வி, சுகாதாரம், மேலாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நீடிப்பு, வளர்ச்சி, மின்னணு பொருளாதாரம், சுற்றுலாத்துறைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு மாணவர்கள் தீர்வு காணலாம் மற்றும் மாணவர்களின் விருப்பப்படி ஒரு பிரிவை தேர்ந்தெடுத்தும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
கருத்துகள்