ஸ்வீடன் - இந்தியா கௌரவ நினைவு வாரத்தின் ஒரு பகுதியாக ஷி ஸ்டெம் 2022 நிகழ்ச்சி மாணவர்களின் கற்பனை திறனை வெளிக்கொணரும் வகையில் இருந்தது
ஸ்வீடன் - இந்தியா கௌரவ நினைவு வாரத்தின் ஒரு பகுதியாக 3-வது ஆண்டாக புதுதில்லியில் ஷி ஸ்டெம் 2022 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்துறை சார்ந்த பெண் சாதனையாளர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு, இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதரகம், அடல் புத்தாக்க இயக்கம், நித்தி ஆயோக், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஜெர்மன் மையம் ஆகியவை இணைந்து இந்த வருடாந்திர நிகழ்ச்சியை நடத்தியது. காணொலி காட்சி மூலம் மாணவர்களுடன் உரையாற்றிய இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் எச்.இ. ஜென் டெஸ்லெஃப், ஷி ஸ்டெம் வீடியோ சவால் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த நிகழ்ச்சி மாணவர்களின் கற்பனை திறனை வெளிக்கொணரும் வகையில் இருந்ததாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய நித்தி ஆயோக் மற்றும் அடல் புத்தாக்க இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ், ஸ்டெம் குழுமத்தில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறினார். ஏடிஎல் மாரத்தான் 2022-ல் 49 சதவீதம் பெண்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்