ரூ. 1.41 கோடி வங்கி மோசடி செய்த 3 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் கோயம்புத்தூர் கிளையில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 1 கோடியே 41 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மொத்தம் 1.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, கோவை மாவட்ட சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சக்திவேல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொம்மையா ஆகியோர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 1 கோடியே 41 லட்சத்து 44 ஆயிரத்து 861 ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை என வங்கி நிர்வாகத்தால் புகார் தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு கோவை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அப்போதைய மூத்த மேலாளர் வெள்ளைச்சாமி உடந்தையாக செயல்பட்டு கடன் வழங்கி வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது
.இதையடுத்து இது தொடர்பாக 21-02-2011 அன்று, இவர்கள் 3 பேர் மீதும் மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. Charge Sheet was filed against A-1 Shri S.Sakthivel, A-2 Shri M.Vellaichamy and A-3 Shri C.Bommaiya in CC No.14/2011, on29.09.2011, U/s.120-B r/w 420, 467, 468 and471 IPCand sec.13(2) r/w 13(1) (d) of PC Act, 1988 & substantive offences thereof. On completion of trial, court pronounced judgement on 29.12.2022 இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் 3 பேரும் குற்றவாளிகள் என கூறி இன்று (29.12.2022) தீர்ப்பளித்து தண்டனை விவரங்களை அறிவித்தது.
கருத்துகள்