சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் டிசம்பர்.5 ஆம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றம்.
சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மூன்று மாதத்திற்கொரு முறை விசாரணை நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவதன்படி, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் விசாரணை நீதிபதிகள் மாற்றப்படுகின்றனர். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் பொது நல வழக்குகள், 2022 ஆம் ஆண்டு முதலாக ரிட் மேல்முறையீட்டு மனுக்களையும் குற்றவியல் அவமதிப்பு மனுக்களை விசாரிப்பார்கள்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வில், ஆட்கொணர்வு மனுக்கள், குற்றவியல் மேல் முறையீட்டு மனுக்கள், 2021 ஆம் ஆண்டு வரையிலான ரிட் மேல் முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்படும்.
நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆகியோர் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கனிமவளம், நிலமெடுப்பு, தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி எம்.தண்டபானி, தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் நலன் தொடர்பான மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, சுங்கம் மற்றும் கலால் வரி, மோட்டார் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வரி தொடர்பான மனுக்களை விசாரிப்பார்.
நீதிபதி ஆர்.தாரணி, 2020 ஆம் ஆண்டு வரையிலான சிவில் துணை மனுக்கள் மற்றும் சிவில் துணை இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பார். நீதிபதி பி.புகழேந்தி, 2017 ஆம் ஆண்டு முதலான இரண்டாம் மேல் முறையீட்டு மனு , சிவில் சீராய்வு மனுக்கள், கம்பெனி மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பார். நீதிபதி ஜி.இளங்கோவன், சிபிஐ மற்றும் இலஞ்ச ஒழிப்புத் தொடர்பான மனுக்களையும், நீதிபதி கே.முரளிசங்கர் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரும் மனுக்களையும் விசாரிப்பார்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 2019 ஆம் ஆண்டு வரையிலான தொழிலாளர் மற்றும் பணியாளர் தொடர்பான மனுக்களையும், நீதிபதி என்.மாலா, முதல் மேல் முறையீட்டு, 2021 ஆம் ஆண்டு முதலான சிவில் துணை மேல்முறையீட்டு மற்றும் சிவில் துணை இரண்டாம் மேல் முறையீட்டு மனுக்களையும், நீதிபதி கே.குமரேஷ்பாபு, 2018 ஆம் ஆண்டு வரையிலான கனிமவளம், நில எடுப்பு, தியாகிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட மனுக்களையும் விசாரிப்பார்கள்.
கருத்துகள்