திருச்சிராப்பள்ளி இலால்குடி அருகில்
மேலவாளாடி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் யுவராஜாவின் குடும்பத்தாருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் பிரச்னைகள் இருந்தது. தொடர்பாக இலால்குடி அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்தப் புகாரில் ஜெகதீசன் மீது 2 நவம்பர் 2022 ல் POCSO சட்டத்தின் கீழ் இலால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலதி வழக்குப்பதிவு செய்துள்ளார், அதன் புலன் விசாரணையில் இருக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மாலதி, புகார்தாரரான யுவராஜிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அந்தப் பணத்தை 13 டிசம்பர் 2022 காலை காவல் நிலையம் வந்து தன்னிடமே கொடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார் இலஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அது குறித்து அளித்த புகாரின் பேரில் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் ஆலோசனையின் பேரில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணம் அரசுசாட்சி முன்னிலையில் யுவராஜிடமிருந்து மாலதி ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சமாகப் பெற்ற போது கையுடன் பிடிபட்டார். ஆய்வாளர் மாலதியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்