ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தது
காங்கிரஸ். 32 ல் வெற்றி; 7-ல் முன்னிலை. பாரதிய ஜனதா கட்சி- 18-ல் வெற்றி; 8-ல் முன்னிலை. சுயேட்சைகள் 3-ல் வெற்றி குஜராத் மாநிலத் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்
பாரதிய ஜனதா கட்சி- 103-ல் வெற்றி; 53-ல் முன்னிலை. காங்கிரஸ் 9-ல் வெற்றி; 8-ல் முன்னிலை. ஆம் ஆத்மி 4-ல் வெற்றி; 1-ல் முன்னிலை. வாக்கு சதவீதம்: ஆம் ஆத்மி AAAP-12.89 சதவீதம் ஓவைசி கட்சி AIMIM-0.28 சதவீதம் பாரதிய ஜனதா கட்சி BJP -52.54 சதவீதம் காங்கிரஸ்.INC-27.27 சதவீதம் குஜராத் மாநிலத் தேர்தலில் அமோக வெற்றியைத் தொடர்ந்து பாதிய ஜனதா கட்சித் தொண்டர்களிடம் வாழ்த்துப் பெற்றார்
முதல்வர் பூபேந்திர பட்டேல். காங்கிரஸ் மேலிடமே இமாச்சல் பிரதேச முதல்வரைத் தீர்மானிக்கும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தகவல். குஜராத்தில் 151 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்கவைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதன் மூலம் தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியமைக்க உள்ளது.குஜராத் கட்லோதியா தொகுதியில் அம் மாநில முதல் மந்திரி பூபேந்திர படேல் 23,713 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை! உத்தரபிரதேச மாநிலம் நாடாளுமன்ற இடை தேர்தல் மெயின்புரி தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார்.
முலாயம் சிங் யாதவ் மறைவு காரணமாக இந்தத் தொகுதிக்கு நடந்த தேர்தலில், டிம்பிள் யாதவ் , பாரதிய ஜனதா கட்சியின் ., வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யாவை 2.8 லட்சம் ஓட்டுக்குள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கருத்துகள்