அரசின் பணியாளர்கள் அனைவரும் அரசு சார்பாக மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே நியமிக்கப்படுகின்றனர் : உச்சநீதிமன்றம்
மத்திய மாநில அரசு பணியாளர்கள் இலஞ்சம் பெறுவது தொடர்பாக தற்போது அரசியல் சாசன அமர்வு நீதிபதிகள் முக்கிய அறிவுறுத்தல்.
அரசின் பணியாளர்கள் அனைவரும் அரசு சார்பாக மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே நியமிக்கப்படுகின்றனர். அரசுத் துறை அலுவலகங்களில் மக்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது அரசு ஊழியர்களில் சிலர் இலஞ்சம் கேட்பதாகப் புகார்கள் தொடர்ந்து வருகிறது. அதற்காக அரசு ஊழல் தடுப்புச் சட்டத்தை வகுத்ததனைச் செயல்படுத்துகிறது. ஆனால், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு பணியாளர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன்னதாகத் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இலஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சி இல்லாமல் கூட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசுப்ணியாளரை தண்டிக்க முடியும் என்றும், புகார் அளித்த நபர் இறந்துபோனால் , அல்லது பிறழ் சாட்சியாக மாறினால் வழக்கு விசாரணையை அப்போதைய சூழ்நிலையிலுள்ள சாட்சிகளை வைத்து நடத்த வேண்டுமென்றும், இலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றங்கள் எந்த விதமான கருணையும் இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியது.
கருத்துகள்