கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள்
இமயமலையின் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வு என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், தரவு சேகரிப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் பகுப்பாய்வு மூலம் ஆராயப்படுகின்ற ஒரு சிக்கலான மற்றும் வளர்ந்துவரும் விஷயமாகும். புவிக்கோள், உயிரிக்கோள் திட்டத்தின் கீழ் ஏரோசல் கண்காணிப்பு வலைப்பின்னலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோ, இயக்குகிறது.. இந்த வலைப்பின்னலிலிருந்து அளவிடப்படும் அளவுருக்களில் ஒன்று கரியமில வாயுவின் அடர்த்தி ஆகும். இதில் கடந்த பத்தாண்டுகளில் குறைந்துவரும் போக்கு காணப்படுகிறது.
பிரதமரின் உஜ்வாலா திட்டம் தூய்மையான வீட்டு சமையல் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
2020, ஏப்ரல் 1 முதல் எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான நெறிமுறைகள் பிஎஸ் (BS) -IV இலிருந்து பிஎஸ் (BS)-VI க்குப் பாய்ச்சல் வேகம் .
பொதுப் போக்குவரத்திற்கான மெட்ரோ ரெயில் நெட்வொர்க் மேம்படுத்தப்பட்டு, மேலும் பல நகரங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.
வாயு எரிபொருள் (சிஎன்ஜி, எல்பிஜி போன்றவை), எத்தனால் கலவை போன்ற தூய்மையான / மாற்று எரிபொருட்களின் அறிமுகம்.
மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான திட்டத்தின் 2ம் கட்டம்- வெளியீடு.
மாசுபாட்டைக் குறைக்க செங்கல் சூளைகளை வளைந்தும் நெளிந்தும் செல்லும் குழாய் மூலம் வெப்பக் காற்றை செலுத்தும் தொழில்நுட்பத்திற்கு மாற்றுதல். குழாய் மூலமான இயற்கை எரிவாயுவுக்கு தொழில்துறை பிரிவுகளை மாற்றுதல் உள்ளிட்டவை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும்.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு
பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் முன்பிருந்த நிலையைவிட 2 இடங்கள் முன்னேறி இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்துக் குறியீட்டு வகைகளிலும் ஒட்டுமொத்தமாக மிக உயர்ந்த மதிப்பீட்டை அடைய எந்த நாட்டின் செயல்பாடும் போதுமானதாக இல்லாததால், முதல் மூன்று இடங்கள் அதாவது 1-3 காலியாக உள்ளன. அதன்பிறகான முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியா (8வது), பிரிட்டன் (11வது), மற்றும் ஜெர்மனி (16வது). மூன்று ஜி 20 நாடுகள் மட்டுமே பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023ல் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளாக உள்ளன. எனவே இந்தியாவின் தரவரிசை ஜி 20 நாடுகளில் சிறந்ததாக உள்ளது.
பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின் பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் தரவரிசை வருமாறு:
பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் – உயர்நிலை
புதுப்பிக்கவல்ல எயசக்தி - நடுத்தரம்
எரிசக்திப் பயன்பாடு - உயர்நிலை
பருவநிலக் கொள்கை - நடுத்தரம்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.வனவளர்ப்பை மேம்படுத்துதல்
காடுகளின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் பாலைவனமாவதைத் தடுத்துநிறுத்த அரசு பல உடனடித் திட்டங்கள்/தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காடு மற்றும் மரம் வளர்த்தல் பரப்பை அதிகரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களால் பல்வேறு காடு வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம் மற்றும் காட்டுத் தீயிலிருந்து பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டம் போன்ற முக்கிய திட்டங்களின் கீழ் காடுகளைப் பாதுகாத்தல், மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தின் மூலம் பல்வேறு காடு வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆதரவளிக்கிறது.
ஈடுசெய்யும் காடு வளர்ப்பு நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் ஆணையம் மூலம் ஈடுசெய்யும் காடு வளர்ப்பு நாடு முழுவதும் காடுகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசுகளும் சீரழிந்த வனப்பகுதிகளை மீட்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்களின் தேசிய மாநாடு 2022, செப்டம்பர் 23-24 ல் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, பருவநிலை மாற்றத்தை முறியடித்தல், ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு, வேளாண் வனவியல், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட வனவிலங்கு மேலாண்மை, சதுப்புநிலப் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தும் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெற்றன.
சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் என்பது காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் காலவரம்புக்கு உட்பட்ட தேசிய அளவிலான ஒரு நீண்ட கால உத்தியாகும். 2017 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டிற்குள் 131 நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் துகள் மாசினை 20-30% குறைக்க தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் உத்தேசித்துள்ளது. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலக்குகள் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் உத்திகளில் தேசிய, மாநில மற்றும் நகர அளவில் தூய்மையான காற்று செயல் திட்டங்களை அமலாக்குவதும் இதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அடங்கும்.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
கருத்துகள்