ஆடை உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர்கள்
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20-ம் ஆண்டு 50.9 சதவீதமாக இருந்த நிலையில் அது 2020-21-ம் ஆண்டில் 52.6 சதவீதமாக இருந்தது. ஆடை உற்பத்தி நிறுவனங்களில் கடந்த 2019-20-ம் ஆண்டில் ஆண்கள் 1.44 சதவீதம், பெண்கள் 3.72 சதவீதம் என சராசரியாக 2.08 சதவீதம் பேர் பணிபுரிந்தனர். 2020-21-ம் ஆண்டில் ஆண்கள் 1.44 சதவீதம், பெண்கள் 4 சதவீதம் என சராசரியாக 2.20 சதவீதம் பேர் பணிபுரிந்தனர். இதன் மூலம் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் 2019-20-ம் ஆண்டைவிட 2020-21-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
இத்தகவலை மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக கூறினார்
கருத்துகள்