சர்வதேச கடல்சார் அமைப்பின் உத்திபூர்வ திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலை சேர்க்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உத்தேசத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு
சர்வதேச கடல்சார் அமைப்பின் உத்திபூர்வ திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கலை சேர்க்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உத்தேசத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிப்பதாக, லண்டனில் நடைபெற்று வரும் சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சிலின் (ஐஎம்ஓ) 128-வது அமர்வில் மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் கூறியுள்ளார். ஐஎம்ஓ-வின் அடுத்த திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒற்றைச் சாளர நடைமுறையை சேர்க்க ஐக்கிய அரபு அமீரகம் உத்தேசித்துள்ளது. கடல்சார் தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இது உதவும் என அவர் கூறினார்.
பூமியில் மனிதர்கள் பாதுகாப்புடன் வசிப்பதற்கு கூட்டுப்பயணம் அவசியம் என்ற சிஓபி-27 மாநாட்டில் இந்தியாவின் அறிக்கையை வலியுறுத்திய டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன், அனைவருக்கும் சமத்துவமான பருவநிலை நீதி என்பதே இந்தியாவின் வழிகாட்டும் கொள்கையாகும் என்று கூறினார். கரியமில உமிழ்வை பெருவாரியாகக் குறைத்தல் மற்றும் அதற்கு நிதி வழங்குதல் என்ற இந்தியாவின் நிலையை அவர் மேலும் வலியுறுத்தினார்.
கருத்துகள்