நேபாள பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்ப கமல் தஹல் ‘பிரசந்தா’விற்கு பிரதமர் வாழ்த்து
நேபாள பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காம்ரேட் பிரசந்தாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“நேபாள பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காம்ரேட் பிரசந்தாவிற்கு நல்வாழ்த்துகள். ஆழ்ந்த கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான இணைப்பின் அடிப்படையில் இந்தியா, நேபாளம் இடையேயான தனித்துவம் வாய்ந்த உறவு அமைந்துள்ளது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்.”
கருத்துகள்