கொடி நாளையொட்டி ஆயுதப்படையினருக்கு பிரதமர் மரியாதை
கொடி நாளையொட்டி ஆயுதப்படையினரின் வீரம் மற்றும் தியாகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வணக்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“இன்று ஆயுதப்படையினரின் கொடி நாளையொட்டி அவர்களது வீரம் மற்றும் தியாகங்களுக்கு நாம் தலை வணங்குகிறோம். பல தசாப்தங்களாக நாட்டைப் பாதுகாப்பதிலும், இந்தியாவிற்கு வலிமை சேர்ப்பதிலும் அவர்கள் முன்னணியில் இருந்து வருகின்றனர்.
ஆயுதப்படையினர் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”
கருத்துகள்