மரியன் பயோடெக் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் உத்தரப்பிரதேச மருந்துக் கட்டுப்பாடு மற்றும் சிடிஎஸ்சிஓ குழுவினர் இணைந்து ஆய்வு
உஸ்பெகிஸ்தான்-மரியான் பயோடெக் இடையே நிலவும் இருமல் சிரப் விஷயம் பற்றிய செய்திக்குறிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இந்திய நிறுவனமான மரியன் பயோடெக் தயாரித்த அசுத்தமான இருமல் சிரப் டாக்1 மேக்ஸ் பற்றி உஸ்பெகிஸ்தானில் இருந்து புகார்கள் வந்துள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் வழிகாட்டுதல் படி, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) 2022, டிசம்பர் 27 முதல் உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
தகவல் கிடைத்தவுடன், உற்பத்தியாளரான மரியன் பயோடெக் நிறுவனத்தின் நொய்டா தொழிற்சாலையில் உத்தரப்பிரதேச மருந்துக் கட்டுப்பாடு மற்றும் சிடிஎஸ்சிஓ குழுவினர் இணைந்து ஆய்வு செய்தனர், ஆய்வு அறிக்கை அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மரியன் பயோடெக் உரிமம் பெற்ற உற்பத்தியாளர் நிறுவனமாகும் . ஏற்றுமதி நோக்கத்திற்காக டாக்1 மேக்ஸ் சிரப் மற்றும் மாத்திரைகள் தயாரிப்பதற்கான உரிமத்தை இது பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருந்துக் கட்டுப்பாட்டாளர் இதனை வழங்கியுள்ளார்.
இருமல் மருந்தின் மாதிரிகள் உற்பத்தி வளாகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்துப் பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
கருத்துகள்