சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்களின் தேசிய மாநாடு 2022, செப்டம்பர் 23-24 ல் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, பருவநிலை மாற்றத்தை முறியடித்தல்,
ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு, வேளாண் வனவியல், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட வனவிலங்கு மேலாண்மை, சதுப்புநிலப் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தும் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெற்றன.
சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் என்பது காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் காலவரம்புக்கு உட்பட்ட தேசிய அளவிலான ஒரு நீண்ட கால உத்தியாகும். 2017 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டிற்குள் 131 நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் துகள் மாசினை 20-30% குறைக்க தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் உத்தேசித்துள்ளது. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலக்குகள் 40% ஆக
மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் உத்திகளில் தேசிய, மாநில மற்றும் நகர அளவில் தூய்மையான காற்று செயல் திட்டங்களை அமலாக்குவதும் இதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அடங்கும்.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
கருத்துகள்