“மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அதிகாரமளிக்கும் திறவுகோல் கல்வி” - திரௌபதி முர்மு
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்த "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை" கொண்டாடும் விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள், மாநில/மாவட்ட நிர்வாகங்கள் போன்றவற்றின் சிறந்த சாதனைகள் ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளை அவர் வழங்கினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திருமதி பிரதிமா பௌமிக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் , ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது உலகில் உள்ள ஒவ்வொரு 8வது நபரும் ஏதோ ஒரு வகையில் ஊனமுற்றவர்கள். இந்திய மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள். எனவே, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும். அவர்கள் நல்ல கல்வியைப் பெறுவதையும், அவர்களின் வீடுகளிலும் சமூகத்திலும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களின் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சமமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதும் நமது கடமையாகும் என்று கூறினார்.
இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில், அறிவைப் பெறுவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் உடல் குறைபாடு ஒரு தடையாக ஒருபோதும் கருதப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் கூறினார். பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகள் தெய்வீகக் குணங்களைக் கொண்டவராக இருப்பதைக் காணலாம். நமது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அசாத்திய துணிச்சல், திறமை மற்றும் உறுதியின் பலத்தால் பல துறைகளில் பிரமிக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தியதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. போதுமான வாய்ப்புகள் மற்றும் சரியான சூழலைக் கொடுத்தால், அவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கைக்கு கல்வி முக்கியமானது என அவர் தெரிவித்தார். கல்வியில் மொழி தொடர்பான தடைகளை நீக்குவதற்கும், குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்விக்கான சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தேசியக் கல்விக் கொள்கை 2020 அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை இந்திய சைகை மொழியாக மாற்றியதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களை பிரதான கல்விச் செயல்பாட்டில் சேர்ப்பது ஒரு முக்கியமான முயற்சி என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பேசுகையில், பிரதமர் தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவரின் மேம்பாடு மற்றும் அனைவரின் நம்பிக்கை என்பதே அவரது குறிக்கோள். 19.04.2017 முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம், 2016ஐ அரசு இயற்றியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீடு வழங்க சட்டம் வழிவகை செய்கிறது என்று கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை செயலர் திரு ராஜேஷ் அகர்வால் ,மூத்த அதிகாரிகள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சாதனங்களை இந்திய உருக்கு ஆணையம் விநியோகிக்கிறது
'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' கொண்டாடப்படுவதையொட்டி, மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய உருக்கு ஆணையம் (இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்), அதன் ஆலைகள்/அலகுகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சாதனங்களை பெருவணிக சமூக பொறுப்பு நிதியிலிருந்து விநியோகித்தது. இந்த முன்னுரிமைத் திட்டத்தை மேற்கொள்வதற்காக ஆணையம் இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகத்தை ஈடுபடுத்தியுள்ளது. புதுதில்லியில் நடந்த நிகழ்வின் போது, ஆணையத்தின் தலைவர் திருமதி சோமா மொண்டல் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுதலையின் அமுதப்பெருவிழாவின் ஒரு கட்டமாக ,இந்த முன்னுரிமை நிகழ்ச்சியானது, நாட்டின் பல இடங்களில் நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள், பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் கேன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் செவித்திறன் கருவிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
தற்போது, இந்திய உருக்கு ஆணையம் தனது ஆலைகளுக்கு சொந்தமான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகள், இல்லங்களை நடத்தி வருகிறது. ரூர்கேலாவில், 'பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளி' , பொகாரோவில் 'ஆஷாலதா கேந்திரா', 'ஊனமுற்றோர் சார்ந்த கல்வித் திட்டம்' துர்காபூரில் ‘துர்காபூர் மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி இல்லம்' பர்ன்பூரில் 'செஷயர் ஹோம்' ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு வழங்கினார்
குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று (டிசம்பர் 3, 2022) நடைபெற்ற விழாவில், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகளை வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய அவர், ஐ.நா வின் புள்ளிவிவரங்கள்படி, உலகில் 1 பில்லியன் (100 கோடி) பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என்றார். அதாவது, நம்மில் 8ல் ஒருவர் ஏதாவது ஒருவகையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் என்று கூறினார். இந்தியாவின் மக்கள்தொகையில், மொத்தம் 2 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதால், அவர்கள் யாரையும் சார்ந்திராமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல், சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை என்றும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் பொதுஅறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது என குறிப்பிட்ட அவர், மாற்றுத்திறனாளிகள் தெய்வீகக் குணங்களை வரமாகப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். துணிவு, திறமை, திட்டமிடல் மூலம் தங்கள் இலக்கை எட்டி சாதனை படைத்த எண்ணிலா மாற்றுத்திறனாளி சகோதர-சகோதரிகளை உதாரணமாகக் கூற முடியும் என்ற திரௌபதி முர்மு, அவர்கள் ஒவ்வொரு துறையிலும், சாதிக்க உகந்த சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தனிநபர் அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக மாறுவதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 வலியுறுத்துவதையும் சுட்டிக்காட்டினார்.
தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே மாற்றுத்திறனாளிகளை அதிகாரமிக்கவர்களாக, தற்சார்பு பெற்றவர்களாக மாற்ற முடியும் என்றும், அவர்கள் மற்ற நபர்களைவிட, அசாத்தியத் திறமை கொண்டவர்களாகத் திகழ்வதாகவும் திரௌபதி முர்மு கூறினார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும், மாற்றுத்திறனாளிகள் துறையும் இணைந்து, மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு, ஆண்டுதோறும் மாற்றுதிறனாளி விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர்களுக்கும் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.மேலும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் பாராட்டினார்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் தைரியத்தையும் சாதனைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில், நமது மாற்றுத்திறனாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் துணிச்சலையும் சாதனைகளையும் நான் பாராட்டுகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி அவர்கள் பிரகாசிக்க ஏதுவாக எங்கள் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது."
"எங்கள் அரசு அணுகல்தன்மையில் சமமாக கவனம் செலுத்துகிறது, இது முதன்மையான திட்டங்கள் மற்றும் அடுத்த ஜென் இன்ஃப்ரா உருவாக்கம் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர அடித்தளநிலையில் பணிபுரியும் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன்."
கருத்துகள்