தமிழக அரசின், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி நிறுவனங்களின் கடந்த கல்வியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை
மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க அரசியல் சாசன சட்டம் 151(2)–ன் படி தமிழக அரசின் தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி நிறுவனங்களின் கடந்த கல்வியாண்டுக்கான அதாவது கடந்த 2021 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த கல்வியாண்டிற்கான, தலைமை கணக்காயரின் தணிக்கை அறிக்கை, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசின் தலைமை கணக்காயர் சி நெடுஞ்செழியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்