சுங்கத் தரகர்கள் உரிமத் தேர்வு, 2023-க்கான இணைய தள எழுத்துத் தேர்வு குறித்து 30.08.2022 அன்று தேசிய நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்க்கவும். இந்தத் தேர்வு 18.03.2023 அன்று நடைபெற உள்ளது.
எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வுகளின் நடைமுறை பின்வருமாறு அமைந்திருக்கும்:
பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட கேள்களைக் கொண்டதாக கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வாக எழுத்துத் தேர்வு நடைபெறும். கேள்விகள் இருமொழியில் அதாவது ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் பதிலளிக்கலாம்.
மற்ற விவரங்கள்:
கேள்விகளின் எண்ணிக்கை : 150
தேர்வு நேரம் : இரண்டரை மணி நேரம் (10:30 மணி முதல் 13:00 மணி வரை)
மதிப்பெண் திட்டம் : ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 மதிப்பெண் வழங்கப்படும்
ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும்)
அதிகபட்ச மதிப்பெண்கள் : 450
தகுதி மதிப்பெண்கள் : 270 (60%)
எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள், திருத்தப்பட்ட சுங்கத் தரகர்கள் உரிம விதிமுறைகள், 2018-ன் 6-வது விதியின்படி, வாய்மொழித் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். வாய்மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்கள் 60% ஆகும்.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் www.cbic.gov.in மற்றும் www.nacin.gov.in என்ற இணையதளங்களைப் பார்வையிடலாம். அல்லது அருகிலுள்ள சுங்க ஆணையரகத்தை அணுகலாம். அல்லது ஃபரிதாபாதில் உள்ள தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாடமியின் (NACIN) மின்னஞ்சல் முகவரியான nacin.cblr@icegate.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்