ஜி-20 சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் திரு தோமர், திரு பரஸ் ஆகியோர் தொடங்கி வைத்தார்
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 முதலாவது சர்வதேச நிதிக்கட்டமைப்பு பணிக்குழுவின் இரண்டு நாள் கூட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் ஆகியோர் சண்டிகரில் இன்று தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர், அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுடன் இந்தியா, படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், இவை இரண்டுமே எதிர்கால இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையதாகும் என்றும் கூறினார். டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை உருவாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா வகிப்பது நம் அனைத்து குடிமக்களுக்கும் பெருமையான தருணம் என்று அவர் கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நமக்கான கடமைகள் குறித்து அனைவரும் நல்ல விழிப்புணர்வு பெற்றுள்ளோம். கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய மத்திய அமைச்சர் திரு பராஸ், ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது சர்வதேச நிதிக் கட்டமைப்பு இன்று நல்லநிலையில் இருப்பதை உறுதி செய்வது, மேலும் வளர்ச்சியடையச் செய்வது ஆகியவை நமது கடமை என்று கூறினார்.
அத்துடன் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு அதிகபட்ச ஆதரவு அளிப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ நடத்துவதற்கு சென்னை தயாராகிறது
முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ நடத்துவதற்கு சென்னை தயாராகிறது.
ஃபிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 30 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்து 80 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கை சென்னை ஐஐடி நாளை (ஜன.31) நடத்த உள்ளது.
‘டிஜிட்டல் கல்வி முன்முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்பாடு’ குறித்து ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தனித்துவ முன்முயற்சி காட்சிப்படுத்தப்படுகிறது.
‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ குறித்த கருத்தரங்கை சென்னை ஐஐடி நடத்துவதுடன் சென்னையில் முதலாவது ஜி-20 கல்விப் பணிக்குழு 2023-ஐ தமிழ்நாடு நடத்தவிருக்கிறது.
இந்தக் கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறைச் செயலாளர் கே சஞ்சய் மூர்த்தி தலைமை தாங்குவார். அனைவருக்கும் எளிதில் அணுகவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான கல்வியை அளிப்பதற்கு ஜி-20 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி உரையாற்றுவார்.
மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை கற்போருக்கு எளிதில் அணுகக் கூடிய மற்றும் சமமான கல்வி வழங்குதல், உயர்தரமான உயர்கல்வி கற்றல் வாய்ப்புகளை விரிவாக்குதல், திறன் கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஒருநாள் கருத்தரங்கில் 3 அமர்வுகளில் இடம் பெறும். பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், தேசிய கல்வித் தொழில்நுட்ப அமைப்பின் (என்இடிஎஃப்) தலைவர் அனில் சஹஸ்ரபுதே, மத்திய அரசின் திறன் கல்வித்துறைச் செயலாளர் அதுல்குமார் திவாரி ஆகியோர் இந்த அமர்வுகளுக்கு தலைமை தாங்குவார்கள். இந்த ஒரு நாள் நிகழ்வில் 19 நாடுகளைச் சேர்ந்த 69 பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். மேலும், ஐஐடி சென்னையின், வரலாறு, தொலைநோக்கு, திட்டம், இயக்கம் ஆகியவற்றை ஆடியோ வழியாக எடுத்துரைத்தல், பாரம்பரிய மையம், புதிய கண்டுபிடிப்புக்கான மையம், அறிவுசார் மையம் ஆகிய சிறப்புமிக்க 3 மையங்களை பார்வையிடுதல் ஆகியவையும் இந்நாளில் இடம் பெறும்.
இந்த கருத்தரங்கு ஜி-20 உறுப்புநாடுகளிடையே பேரார்வத்தை உருவாக்கியிருப்பதாக பேராசிரியர் காமகோடி தெரிவித்தார். பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்துறையில் தங்களின் மிகச் சிறந்த நடைமுறைகளை எடுத்துரைக்கும் உள்ளீடுகளை 15 நாடுகள் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜி-20 கல்வி பணிக்குழு:-
உயர்கல்வித்துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி தலைமையில் ஜி 20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் ஃபிப்ரவரி 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய தலைமைத்துவத்துவம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு செயல் வடிவம் அளிக்கிறது. ஜி 20 முதலாவது கல்விப் பணிக்குழு கூட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைக்கிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக அளவில் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு நீண்ட கால, நிலையான வகையில் எவ்விதம் தீர்வு காண வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும். 30 நாடுகளைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள், சர்வேதேச அமைப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்துமான, தரமானக் கல்வியை வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
ஃபிப்ரவரி 1-ம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் பிரதிநிதிகளை சென்னைக்கு அருகே உள்ள மகாபலிபுரத்தின் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய புராதன இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளமான, கட்டடக்கலைப் பாரம்பரியம் மற்றும் உயர்தர கைவினையைப் பிரதிபலிக்கும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மகாபலிபுரம் புராதன சின்னங்களை இந்த நிகழ்வில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள்.
பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் உணவு வகைகளின் ருசிகரமான அனுபவத்தையும், வலிமையான கலாச்சார வடிவங்களை கண்டுகளிக்கவும் ஏதுவாக பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதிநிதிகளுக்கு சிறப்பான மற்றும் எளிதில் மறக்க முடியாத அளவிலான அனுபவங்களோடு அவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பிச் செல்வர்
கருத்துகள்