சில நாட்களுக்கு முன் 45 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாகப் 10 நாட்களில் கூடுதலாக
21 காவல்துறை அதிகாரிகளை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இடமாற்றம் செய்தது. தமிழ்நாடு அரசு 45 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றமும் பணி உயர்வும் வழங்கி உத்தரவிட்டது. 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதில் 7 பேருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பின் தமிழ்நாடு உளவுத்துறை அளித்த அறிக்கையும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனப் பார்க்கலாம். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டியின் அறிக்கையில், மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய கருணாசாகர், காவலர் நலப்பிரிவு டிஜிபியாகவும்,
காவலர் நலப்பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநராகவும் அதேபோல் சென்னை மைலாப்பூர் துணை ஆணையர் ரோகித் நாதன் ராஜகோபால், சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும், மாநில குற்ற ஆவணக் காப்பக கண்காணிப்பாளர் மேகலினா ஐடேன், தென் மண்டல பொருளாதாரக் குற்றப்பிரிவுக் கண்காணிப்பாளராகவும், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சாம்சனும், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத்தும், தஞ்சாவூர் கண்காணிப்பாளராக இருந்த முத்தரசி,
சிபிசிஐடி கண்காணிப்பாளராகவும், தென்காசி கண்காணிப்பாளர் செந்தில் குமார் அமலாக்கத்துறை கண்காணிப்பாளராகவும், காவல்துறை பயிற்சிக் கல்லூரி கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ், சிவகங்கை மாவட்டக் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை அறிக்கை அளித்த நிலையில் இந்த மாறுதல் நடந்ததாகத் தெரிகிறது.
கருத்துகள்