காலம்சென்ற செல்வ ரத்தினம் நாடார் மற்றும் இரஜரத்தினம் நாடார் வாரிசுகளுக்கு உரிமையுள்ள
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மீது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உள்ள வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நிதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் என்ற கடை அல்லது நிறுவனம் மீதான வழக்கை பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. வழக்கு தொடர்பாக நகர ஊரமைப்புத் திட்டமிடல் துறையின் இயக்குநர், மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கட்டுமானப்பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் செயல்படத் தடைகோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்