ஆஷிஷ் சந்தோர்கரின் “பிரேவிங் எ வைரல் ஸ்டார்ம்: இந்தியாவின் கொவிட்-19 வேக்சின் ஸ்டோரி” புத்தகத்தை பிரதமர் பெற்றுக் கொண்டார்
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா சந்தித்தவை குறித்த ஆஷிஷ் சந்தோர்கரின் “பிரேவிங் எ வைரல் ஸ்டார்ம்: இந்தியாவின் கொவிட்-19 வேக்சின் ஸ்டோரி” என்ற புத்தகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பெற்றுக் கொண்டார்.
இது குறித்து ஆஷிஷ் சந்தோர்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவை பிரதமர் தமது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் தடுப்பூசியில் இந்தியாவின் முன்னேற்றம் என்பதை விவரிக்கும் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்