மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ராஜ்காட்டில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட்டில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"ராஜ்காட்டில் பாபு அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்."தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு.அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மகாத்மாவுக்கு இளமையில் உள்ளம் கவர்ந்த இரு நிகழ்வுகள் அவரை உயர் நிலைக்கு அழைத்துச் சென்றன. ஒன்று ஹரிச்சந்திரனுடைய வாய்மை. பொய் சொல்லாமை.துன்பத்திலும் விடாப்பிடியாக தன் வாக்கினை காக்கும் வல்லமை. அதுவே முண்டக உபநிஷத் கூறும் "சத்திய மேவ ஜெயதே" வாய்மையே வெல்லும். பாரதம் உலகிற்கு வழங்கும் உன்னதக் கோட்பாடு. இந்தியாவின் வெற்றிக்கான குறீயீடு. அடுத்து சிரவணனுடைய நிகழ்வு. தசரதன், சப்தவேதி என்ற அஸ்திரத்தால்இளைஞனான சிரவனனை கொன்றது. தன் வயதான தாய் தந்தையரைப் பேணிக் காத்த உத்தம சீலன். இவன் தாய் சூத்திரப் பெண். தகப்பன் வைஷியன். இவன் சகல வேதங்களையும் கற்றறிந்த உத்தம அந்தணன். குணத்தால் தவசீலர்கள். ஒலியைக் கொண்டு பாயும் அஸ்திரம். அஹிம்சை அறியாது. ஆகவே அடிப்படையின் அவசியமான அகிம்சை. ஜீவகாருண்யம் பிரதானம் என்பதே அண்ணலின் கருத்து. ஜாதியோ சடங்குகளோ, மதமோ அஹிம்சை பிரதானமாக இருந்தால் மனிதன் விலங்கு என்ற அடிப்படைக்கு இடமில்லை. செய்யும் செயலுக்கு உரியது திரும்ப வரும். தானே அனுபவிக்க வேண்டியதாகும். இந்திய அரசியலில் இந்த இரண்டுக்கும் (சத்தியம் , அகிம்சைக்கு) வாக்கும் மனமும் வேண்டும். வாக்கு வங்கிகளாக மக்களை ஏமாற்றாமல் அண்ணல் காட்டும் கொள்கைகளை கடைப்பிடித்தால், அவர் தம் ஆன்மா சாந்தியடையும். மக்களுக்கும் நாட்டுக்கும் சாந்தி நிலவும். சிரவணன் வரலாறு: பிரதேசின் புத்திரரும் ரிக்ஷன் என்ற இயற்பெயர் கொண்டவருமான ஸ்ரீ வால்மீகி மஹரிஷியின் ஸ்ரீமத் ராமாயணம்.உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளில் முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின் போது, உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்