இலட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது.
இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான திரு முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், திரு முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு 2023 ஜனவரி 25 அன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்தப்பின் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்துள்ள தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீட்டையும் ஒத்திவைத்துள்ளது.
கருத்துகள்