திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு தலைவன் 'கஞ்சிப்பானை இம்ரான்', இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
பிரபல இந்திய மற்றும் இலங்கை ஊடக 'செய்தி நிறுவனம் காவல்துறை தரவுகள் தரும் தகவலின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள், கொலைகள் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக. இலங்கை காவல்துறையால் தேடப்பட்ட 'கஞ்சிப் பானை இம்ரான்' எனும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான், 2019 ஆம் ஆண்டில் துபாயில் பல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஷ் ஆகியோர் பங்குபெற்ற விருந்துபசாரமொன்றில் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு அப்போதே இல்ங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து கண்காணிப்பிலிருந்து வந்த கஞ்சிப் பானை இம்ரான், 2022 டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி தலா ரூபாய். 5 மில்லியன் கொண்ட இருநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில்
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் வந்தவரையும் அவரது கூட்டாளியையும் தேடிக் கண்டுபிடிக்க தமிழ்நாடு உளவுத்துறை, மாநிலம் முழுவதுமுள்ள உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக. முன்னணி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
பிணையில் வந்த பிறகு இம்ரான் இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களிலிருந்து இந்திய மாநில உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிணையில் வந்த இம்ரான் மாறுவேடத்தில் தலைமன்னாருக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான ஏற்பாடுகளை அவரது கூட்டாளிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்திருந்ததாக பிரபல நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதே வேளை குறித்த விடயத்தின் தொடர்பில் இதுவரை இலங்கை காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கஞ்சிப் பானை இம்ரான் தொடர்பான எவ்வித தகவல்களையும் உடனடியாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்