முன்னால் தமிழ்நாடு முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு.
காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சசிகலா நடராஜன் , வி என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதில் ஜெ.ஜெயலலிதா காலமானதால் . மற்ற மூவரும் கர்நாடக மாநில சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் மூவரும் விடுதலையாகினர். வழக்கு விசாரணையின் போது, ஜெ.ஜெயலலிதாவின் வீட்டிலிருந்த 27 வகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள், 250 சால்வைகளும் அடங்கும். இவை 2011-ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களில் புடவைகள், காலனி, சால்வைகள் ஆகியவற்றை ஏலம் விடக் கோரி வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி தொடர்ந்த வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டத்தையடுத்து உரிய வகையில் மேல்முறையீடு செய்த மனு நீதிபதி இராமச்சந்திர டி.ஹுத்தார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது பல ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சரியானதென நீதிபதி தீர்ப்பளித்தார். கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்திலுள்ள காலம்சென்ற ஜெ.ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் நடத்த சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.ஜெ.ஜெயலலிதாவின் சொத்துகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கிய சொத்துக் குவிப்பு வழக்கில் அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை வருகிறது,
27.9.2014- அம் நாளில் அப்போது முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா நடராசன், வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 5.12.2016- ஆம் நாளில் ஜெ. ஜெயலலிதா இறந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 14.2.2017- ஆம் நாளில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், தீர்ப்பின்போது ஜெ.ஜெயலலிதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தததில், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யாரிடம் வசூலிப்பது என கேட்கப்பட்டிருந்தது. இந்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 28.9.2018- அம் தேதியில் தள்ளுபடி செய்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகள் என்னவாகும் என்கின்ற நிலையில், தற்போது அவரது சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி
அது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களுக்கும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துகள் குறித்த அறிக்கையை விரைவாக அனுப்ப வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து, வட்டாட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டதில், மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சொத்துகள் இருப்பின் அது குறித்த விவரத்தையும், இல்லை என்றால், ‘இனம் இல்லை’ என குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.குறித்து ஜெ.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் (1998 - 2001) வாதாடிய சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.வி.சோமசுந்தரம் கருத்தாக :- உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளிவந்தபோது ஜெ.ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் மட்டுமே அவரது பெயர் தீர்ப்பில் இடம்பெறவில்லை. மற்றபடி ஏற்கெனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
தண்டனை பெற்ற பின்னர் குற்றவாளி உயிரோடு இல்லை என்றாலோ அல்லது தலைமறைவாகி விட்டாலோ ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வருவாய் மீட்பு சட்டத்தின் படி (Revenue Recovery Act ) சொத்துகளை கணக்கெடுப்பு செய்து, அதனை பொது ஏலம் நடத்தி நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தான், தற்போது இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள்