ஈரோடு கிழக்குத் தொகுதி இடைகாகாலத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது,
என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். மேலும் சோனியா, ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவது குறித்த கேள்விக்கும் அவர் விளக்கமளித்தார்
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்றப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைக்காலத்தேர்தல் நடக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைக்காலத் தேர்தலில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு அளித்தது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நேற்று கூட்டம் நடந்த இந்தக் கூட்டத்தில் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்றமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். கிருஷ்ணமூர்த்தி உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காணொலிக்காட்சி வாயிலாகப் பங்கேற்றார். சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்:-
"ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும். இடைத்தேர்தல் என்பதால் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்திற்கு வர வாய்ப்புகள் இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும் எனக் கூறினார். முன்னதாக ஈவிஎஸ் இளங்கோவன் இன்று காலை மகன், சஞ்சய் சம்பத்துடன் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார்.. அதன் பின்னர் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்
ஈரோடு கிழக்கு சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலுக்காக, கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக அமைத்துள்ளதில்
அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் , இல. பத்மநாபன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கருத்துகள்