மூத்த சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜூடோ கே.கே. ரத்தினம் உடல் நலக் குறைவால் காலமானார்.
வயது 93. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 1,500 திரைப்படங்களுக்கு மேலாக சண்டைப் பயிற்சி ஆசானாக பணிபுரிந்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி,கமல ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட இரண்டு தலைமுறை கதாநாயகர்களின் படங்களிலும் சண்டை இயக்குனராக பணிபுரிந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் - 1200 க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி கின்னஸ் உலக சாதனை செய்தவர் . 2016 ஆம் ஆண்டில் சங்கரதாஸ் சுவாமிகள் விருதும் . 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்ற ஜூடோ ரத்தினம் என்றழைக்கப்படும் கே.கே.ரத்னம் கோலிவுட் , பாலிவுட் , மாலிவுட் , சாண்டல்வுட் மற்றும் டோலிவுட் ஆகிய திரை வழக்குமொழி நாடுகளில் சண்டை இயக்குநராவார், அப்போது வட ஆற்காடு மாவட்டம் தற்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்தவர் 1959 ஆம் ஆண்டில் தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமாகி 1966 ஆம் ஆண்டில் வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் சண்டை இயக்குனராக அறிமுகமானார் தலைநகரம் திரைப்படத்தில் ஓய்வுக்குமுன் நடிகராக கடைசியாக தோன்றினார் தற்போது சண்டை இயக்குநர் மற்றும் நடிகர்களான விக்ரம் தர்மா ,சூப்பர் சுப்பராயன் , தளபதி தினேஷ் , ஜாகுவார் தங்கம் , ராம்போ ராஜ்குமார் , FEFSI விஜயன் , பொன்னம்பலம் , ஜூடோ. கே.கே.ராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், ஆம்பூர். ஆர்.எஸ்.பாபு, எம்.ஷாகுல் ஹமீது ஆகியோர் அவரது மாணவர்களாகவும், உதவியாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
இவரது மகன் ஜூடோ. கே.கே.ராமுவும் சண்டை இயக்குநர் ஆவார், அவரது பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் சண்டைக் கலைஞர்கள் மற்றும் திரைப்படங்களில் தற்போது சண்டைக் ஙாட்சிகள் நிகழ்த்துகிறார்கள்.குடியாத்தத்தில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஜூடோ ரத்தினம் தற்போது காலமானார் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் வைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவரது உடல் குடியாத்தத்தில் நல்லடக்கம் செய்யபட உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்