பொது சேவை ஒளிபரப்பின் கடமை குறித்த அறிவுரையை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது
இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளின் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 09.11.2022 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, தனியார் அலைவரிசைகள் ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு பொது சேவை ஒலிபரப்பை பயன்படுத்த முடியும். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் அவற்றின் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்ட அமைச்சகம் அதன் அடிப்படையிலான அறிவுரையை 30.01.2023 அன்று வெளியிட்டுள்ளது.
30 நிமிட ஒளிபரப்பின் உள்ளடக்கம் பற்றி தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சகம், ஒளிபரப்பு சேவை இணையப்பக்கத்தில் இணையவழியில் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளது. ஒளிபரப்பின் உள்ளடக்கம் தேசிய முக்கியத்துவம் கொண்டதாகவும், சமூகத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம்
i. கல்வி மற்றும் எழுத்தறிவின் பரவலாக்கம்
ii. வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு
iii. சுகாதாரம் மற்றும் குடும்பநலன்
iv. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
v. மகளிர் நலன்
vi. சமூகத்தில் நலிந்த பிரிவினரின் நலன்
vii. சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தின் பாதுகாப்பு
viii. தேசிய ஒருமைப்பாடு
கருத்துகள்