ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் .டிடிவிதினகரன் தலைமையில் மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களும் அறிவிப்பு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 29 வயது இளைஞர் சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இதனைத் தெரிவித்தார். இந்த ஆலோசனையை தொடர்ந்து டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் வேட்பாளராக அறிவித்துள்ளார்.மேலும் டிடிவி தினகரன் கூறும்போது, ‛‛ திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்தற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். 290 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்'' என்றார்.வேட்பாளர் அறிவித்த கையோடு டிடிவி தினகரன் அடுத்தக்கட்டமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டார். அதன்படி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக தேர்தல் பணிக்குழு
கட்சியின் துணை பொதுச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு தலைமையில் செயல்படும். மொத்தம் 294 பேர் இடம்பெற்றுள்ளதில்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் அன்பழகன், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எம் ரங்கசாமி, முன்னாள் அமைச்சரான செந்தமிழன், கயத்தாறு ஒன்றியகுழு தலைவர் மாணிக்கராஜா, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் எம்எல்ஏவும் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் இ மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏவும் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வீரபாண்டி எஸ்கே செல்வம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் குமரேசன், முன்னாள் எம்எல்ஏவும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பார்த்திபன், கழக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்ஆர் முருகன், தருமபுரி மாவட்ட செயலாளர் டிகே ராஜேந்திரன், கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிர்காமு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், கழக அமைப்பு செயலாளர் பாண்டுரங்கன் உள்பட 294 பேர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால் ஆகிய மூவரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அமமுக வேட்பாளர் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
கருத்துகள்