மணிப்பூர் மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மணிப்பூர் மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மணிப்பூர் மக்களுக்கு மாநிலம் உருவான தின வாழ்த்துக்கள். இம்மாநிலம் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இம்மாநில மக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மணிப்பூர் வலுப்படுத்தவும் நான் பிரார்த்திக்கிறேன்.
திரிபுரா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்
திரிபுரா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மாநிலம் உருவான தினத்தையொட்டி திரிபுரா மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்குக் கடந்த 5 ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை. வேளாண்மையிலிருந்து தொழில்துறை வரை, கல்வியிலிருந்து சுகாதாரம் வரை இம்மாநிலம் மகத்தான மாற்றத்தைக் கண்டுள்ளது. வரும் காலங்களில் இந்தப் போக்கு தொடரட்டும்." மேலும்
மேகாலயா மக்களுக்கு மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
மேகாலயா மாநில தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"மேகாலயா மக்களுக்கு அவர்களின் மாநில தின வாழ்த்துகள். இந்த மாநிலம் அதன் துடிப்பான கலாச்சாரத்துக்கும், குறிப்பாக இசை, கலை மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கும் பெயர் பெற்றது. மேகாலயா மக்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர். வரும் ஆண்டுகளில் மேகாலயாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்."
கருத்துகள்