திரைபட இயக்குனராக 1986 ஆம் ஆண்டு
ஆயிரம் பூக்கள் மலரட்டும் மூலமாக அறிமுகமாகி.
இராஜா இராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை இயக்கியவர் இ.ராமதாஸ். வசன எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்த இ.ராமதாஸ் நடிகராக தமிழ் திரைப்படமான வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கிச் சட்டை, மெட்ரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மகன் கலைச் செல்வனின் முகநூல் பக்கத்தில், " எனது தந்தை திரு. E Ramdoss அவர்கள் இன்று இரவு MGM மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதிச் சடங்குகள் 24.01.2023 மாலை 5 மணியளவில் 16/1078, முனுசாமி சாலை, கே. கே. நகர், இல்லத்தில் நடைபெறுகிறது என வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். - கலைச்செல்வன்." எனப் பதிவிட்டுள்ளார்.இ.ராமதாஸ் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிகிறார்கள்..
கருத்துகள்