ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தேசியத் தலைவர் திரு சரத் யாதவ் மறைவுக்கு
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல்
ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தேசியத் தலைவர் திரு சரத் யாதவ் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சரத் யாதவின் இல்லத்திற்குச் சென்ற திரு அமித் ஷா, புதுதில்லியில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
திரு சரத் யாதவ் மறைவு நாட்டின் பொது வாழ்க்கைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திரு சரத் யாதவ் தனது பல தசாப்த கால பொது வாழ்வில், நாட்டில் அவசரநிலைக்கு எதிராக குரல் எழுப்பி, ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினைகளை எழுப்பி, அவர்களின் நலனுக்காக பாடுபட்டார். தனது 50 கால ஆண்டு பொது வாழ்வில், திரு சரத் தனது கடைசி மூச்சு வரை சோசலிச அடிப்படைக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றார்.
திரு சரத் யாதவ் பல தசாப்தங்களாக பீகார் மற்றும் இந்திய அரசியலில் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினார் என்று திரு அமித் ஷா கூறினார். மத்தியப் பிரதேசத்தில் பிறந்த ஸ்ரீ சரத் யாதவ், தனது கடின உழைப்பு மற்றும் கொள்கைகளின்படி வாழ்க்கையை வாழ நிலையான முயற்சிகளை மேற்கொண்டு நாடு முழுவதும் நிரந்தர முத்திரை பதித்துள்ளார். “துக்கத்தின் இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்த ஆன்மாவுக்கு இறைவன் தனது புனித பாதத்தில் இடம் தரட்டும்” என்று திரு ஷா கூறினார்
கருத்துகள்