வன்னியர்கள் 10.5சதவீதம்
உள்ஒதுக்கீடு பெறப்பட்ட வழிமுறை.
1989 ஆம் ஆண்டில் 108 ஜாதிகளை இணைத்து 20 சதவீதம் MBC இட ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் அப்போது முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி யுடன் வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கையெழுத்திட்டு வாங்கிக் கொடுத்தவர் சி என் ஆர்
பிறகு அந்த 20 சதவீதம் எம்பிசி இட ஒதுக்கீட்டில் வன்னிய சமுதாயத்துக்கு சரியான பங்கீடு கிடைக்கவில்லை என்று 1990 ஆம் ஆண்டிலிருந்து லிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஆட்சியாளர்களைக் கேட்டு அது நடக்கவில்லை என்றதும் 2009 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎன்ஆர் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு 20 சதவீதத்திலிருந்து கேட்டு வழக்குத் தொடர்ந்தார். 2012 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்றார்.அந்த வெற்றியை நடைமுறைப்படுத்த.
2010 ஆம் ஆண்டில் சிஎன்ஆர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். W.P. No. 14025 of 2010.
பலமுறை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இறுதியாக வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் உள்ஒதுகீடு செயல்படுத்த நீதிமன்ற ஆணையும் பெற்றார்.
அந்த நீதிமன்ற ஆணையின் படி, 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அரசாணை எண் GO MS No.35 பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையைக் கேட்டு வெளியிட்டது.
2012. அம் அண்டில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் இதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடும் அருந்ததியர்களுக்கு 3.0 சதவீதம் உள் ஒதுக்கீடும் கொடுத்த வழிமுறை தரவுகளின் அடிப்படையில் 10.5 சதவீதம் பரிந்துரை செய்தது.
அதைச் செயல்படுத்தாத தமிழ்நாடு அரசை எதிர்த்து சிஎன்ஆர் 2015 ஆம் ஆண்டில் நீதிமன்றம் சென்று முறையிட்டு 30 நாட்களுக்குள் செயல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதியானையைப் பெற்றார்.
2011 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை அதிமுக அரசுக்கு ஆதரவு கொடுத்தவர் சி என் ஆர். அந்த ஆதரவுக் காலத்தில் இத்தனை வழிமுறைகளையும் சட்ட போராட்டத்தில் மூலம் சிஎன்ஆர் அதிமுக அரசைச் செய்ய வைத்தார். பிறகு அன்றைய முதலமைச்சர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா இறந்ததால் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கிடப்பில் போடப்பட்டது. பின் எடப்பாடி கே.பழனிச்சாமி மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு வன்னியர் பொதுச்சொத்து வாரியத்துக்கான 41 வது சட்டத்தை குடியரசுத்தலைவர் கையெழுத்துடன் ஒப்புதல் பெற்று சட்டப் போராட்டத்தின் மூலம் சட்டமாக்கியவர் சிஎன்ஆர் 2019- அலாம் ஆண்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு சி என் ஆர் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
பிறகு 2020 ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை சிஎன்ஆர் தலைமையில் நடத்தினார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி மருத்துவர் ச் ராமதாஸ் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் அறிவித்தார். 20 சதவீதம் தனி ஒதுக்கீடு சாத்தியமில்லை என்றதும் உள் ஒதுக்கிட வேண்டும் என்றார்.
2021 ஆம் ஆண்டு 3 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசுக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் சி என் ஆர் வழக்குத் தொடுத்தார்.
பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு அதிமுக அரசால் தேர்தல் அறிவிப்புக்கு முன் கொடுக்கப்பட்டது.பின் திமுக ஆட்சியில் வந்ததும் 10.5 சதவீதம் நடைமுறைப்படுத்த சட்டத்தை சட்டமன்றத்தில் 2021-ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.
சகோதர சமுதாயத்தின் தவறான புரிதலால் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மார்ச்சில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏழு காரணங்களைச் சொல்லி தடையுத்தரவு பிறப்பித்து.
10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்குத் தடை நீதிமன்றம்_கேள்வி.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்த 184 பக்கத் தீர்ப்பில் கேட்ட கேள்வி, ஏன் CN.Ramamurthy Vs Tamilmadu govt 2015 உள்ஒதுக்கீட்டு ஆவணத்தை இடஒதுக்கீடு கொடுத்தபோது மறைத்தீர்கள் எனக் கேட்டுள்ளது. அதனால் 10.5 சதவீதம் கொடுத்தது உள்நோக்கத்திற்காக என்றது.
அதன் பிறகு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வாதிட்டது. அந்த வாதத்தில் சிஎன்ஆர் கொடுத்த சட்ட ஆவணங்களை வாதிட்டு அதனுடன் பொதுவான வாதங்களை அதிகமாக வைத்தது.
பிறகு உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பில், மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை தடை உத்தரவுக்காக சொன்ன ஏழு காரணங்களில் ஆறு காரணங்கள் தவறென்று உச்சநீதிமன்றம் சொல்லி நீக்கியது. ஒரே ஒரு காரணம் மட்டும் சரி என்றும் அந்த காரணத்தின் சரியான தரவுகள் ஏதாவது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமுதாய பயன்படுத்த சரியான தரவுகளை வைத்து மீண்டும் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுவரை உள் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
இதன் பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிஎன்ஆரிடம் 10.5 சதவீதத்துக்கான அனைத்து சட்டப் போராட்ட ஆவணங்களையும் மேலும் உரிய தரவுகளையும் ஒரு புத்தகமாகக் கேட்டிருந்தார்.
அனைத்து சட்ட போராட்ட ஆவணங்களையும் தரவுகளையும் ஒரு புத்தகமாக தமிழ்நாடு முதல்வரிடம் அக்டோபர் மாதம் 2022- ஆம் ஆண்டில் 10.5 சதவீதம் மீண்டும் நடைமுறைப்படுத்த வழங்கினார்.
இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் உரிய தரவுகளை சரி செய்து 10.5 சதவீதம் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
சிஎன்ஆர் சமூகநீதிபடி அனைத்து சமுதாயமும் பாதிக்காத வண்ணம் சட்டப் போராட்டத்தை கையில் எடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 2010 ஆமத ஆண்டிலிருந்து இன்றுவரை போராடுகிறார்.
சகோதர சமுதாயம் இந்த உண்மையான போராட்டத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் அனைத்து சகோதர சமுதாயத்துடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்பது தான் சிஎன்ஆரின் தலையாய கொள்கையாகும்.
அதனால் தான் இன்று வரை சிஎன்ஆர் அறிவாயுதம் ஏந்திப் போராடுகிறார்.என் கருத்தை முன் வைத்த நிலையில் இவர்களைப் போலவே மற்ற பெரிய சமுதாயத்தில் உள்ள அனைவரும் தனி இடஒதுக்கீட கேட்டால் என்ன நிலைமை வரும் என்பதற்கு அவர்களே பதில் கூறினால் சரியாக இருக்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பீகாரில் துவங்கியது போல தமீழ் நாட்டில் துவங்க வேண்டும் என்பதே இங்குள்ள பொதுநீதி.
கருத்துகள்