பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலைப் பூஜைகளில் முதல் கால வேள்வி துவங்கியது.
ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்
23ஆம்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலை திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனவரி மாதம் .27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
மலைக்கோவிலிலுள்ள தங்கவிமானம், தங்க சப்பரம், தங்கமயில், தங்கத்தேர் மற்றும் சுதை சிற்பங்கள், பிரகாரங்களிலுள்ள சுவாமி சன்னதிகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது முக்கிய நிகழ்வான யாகசாலை பூஜைகள் நேற்று திங்கள்கிழமை காலையில் பாதவிநாயகர் கோயிலில் பரிவார உப தெய்வங்களின் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு வேள்விச்சாலை புகுதல் நடைபெற்றது.
பிற்பகல் மூன்று மணிக்கு மேல் மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அஷ்டபந்தனம் செய்தல் மற்றும் மூலஸ்தானம், அர்த்தமண்டபப் பணிகள் பொருட்டு திரையிடப்பட்டதுமுன்னதாக பாரவேல் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட இறை திருக்குடங்களில் மூலவர் அருட்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்து உட்பிரகாரம் மேளதாள சகல வாத்தியங்கள் முழங்க உலா வரப்பட்டது.
பின்னர் திருக்குடங்கள் கார்த்திகை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு எழுந்தருளல் செய்யப்பட்டது. கார்த்திகை மண்டபத்தில் சுமார் 90 க்கும் மேற்பட்ட வேள்விக் குண்டங்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அந்தண வேத விற்பன்னர்கள் மந்திரம் ஒத முதல் கால வேள்வி துவங்கியது. மூலவருக்கு அமைக்கப்பட்ட பிரதான மேடையில் திருக்குடங்கள் எழுந்தருளச் செய்து தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து தேன், நெய், காய்கனிகள் 12 விதமான மூலிகைகள் கொண்டு பூர்ணாஹுதி செய்யப்பட்டு வேள்வி நிறைவில் மஹாதீபாராதனை நடைபெற்றது.
வேள்விச்சாலையில் தமிழ்முறை ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகளின் பாடல்களைப் பாடினர், நிகழ்ச்சியில் பழனிக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனால் மக்கள் கட்டுப்பாடு காரணமாக தரிசிக்க இயலாத நிலை. பழனி மலையில் ஜனவரி மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதை முன்னிட்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி(மூலவரை) யாரும் தரிசிக்க முடியாது.
இதனைத் தொடர்ந்து 23 ஆம் தேதி முதல் 28 தேதி வரை தங்கத்தேர் புறப்பாடும் நிறுத்தி வைக்கப்படுமென இந்து சமய அறநிலையத்துறை பழனி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி 26ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்
23ஆம்தேதி மாலையில் முதற்கால யாகம் தொடங்குகிறது. பின்னர் பழனி பாதவிநாயகர் கோவில் முதல் இரட்டை விநாயகர் கோவில் வரை உள்ள அனைத்து பரிவார சன்னதிகளிலும் 26ஆம்தேதி காலை 9.50 மணியில் இருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதி, ரேவதி நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணிக்குள் பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கருத்துகள்