டெல்லி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராசன் கேவியட் மனு தாக்கல் கட்சி சின்னம் விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் எசந கேவியட் மனு அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு மேல்முறையீடு செய்தால் தமது தரப்புக் கருத்தையும் கேட்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி சசிகலா நடராஜனை முதல்வராக தேர்வு செய்த நிலையில் ஆளுநர் விடுப்பில் சென்று விடவே அவர் பல வகையில் முயற்சித்தார். ஆனால் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா நடராஜன் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிட்டதனால் ஒரு முன் ஏற்பாடாக எடப்பாடி கே. பழனிசாமியை கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களைத் திரட்டி முதல்வராக்கினார் சசிகலா நடராஜன் அப்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் சசிகலா நடராஜன் நியமித்து விட்டு தண்டனை காரணமாக கர்நாடக மாநில சிறைக்குச் சென்றார்.
இந்தக் கால கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பையும் ஆளுநரே இணைந்து வைத்த நிகழ்ச்சி நடந்தது,
தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா நடராஜன் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் அதிமுகவில் புதியதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ப்தவிகளும் பலர் வழிகாட்ட உருவாக்கப்பட்டன.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தம்மை நீக்கிய அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாதென அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் சசிகலா நடராஜனின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரால் முதல்வராக உறுவாக்கப்பட்ட நபராக இருந்தும் துரோகம் செய்த எடப்பாடி கே.பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.
நீண்டகாலம் நிலுவையிலிருந்த நிலையிலிருந்த சசிகலா நடராஜனின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார் அந்த மனுவை நிராகரிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் முன்னால் அமைச்சர் செம்மலை ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததில், வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்றக் கட்டணம் செலுத்த சசிகலா நடராஜனுக்கு உத்தரவிட வேண்டும்; அப்படிக் கட்டணம் செலுத்தாவிட்டால் சசிகலா நடராஜன் மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுகவின் அமைப்பு செயலாளர் என்ற அடிப்படையில் செம்மலை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததனால் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு தமது மனு தள்ளுபடி செயப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்ட நிலையில்
சசிக்கலா நடராஜன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், பொதுச்செயலாளர் பதவி நீக்க வழக்கில் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தி மேல்முறையீடு செய்யும் போது Caveat Petition. (Section 148A of the Civil Procedure Code, 1908) ன் படி தமது தரப்புக் கருத்தையும் கேட்ட பின்னரே உத்தரவிட வேண்டும் என்று சசிகலா நடராஜன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் .இரட்டை இலைச் சின்னம் தொடர்பான எடப்பாடி கே.பழனிச்சாமி வழக்கில்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கருத்துகள்