அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய கண்டுபிடிப்பு - நச்சு தனமையுடைய குரோமியம் உலோகத்திற்கு பதிலாக நிக்கல் கலவை பூச்சுகளை பயன்படுத்துதல்
பொறியியல் பயன்பாட்டில் சுற்றுப்புற சூழலை மாசு படுத்தும் குரோமியம் பூச்சுகளுக்கு பதிலாக நானோ தொழில்நுட்பம் கொண்ட நிக்கல் பூச்சுகளை பயன்படுத்தும் முறையை துகள் உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச நவீன ஆய்வு மையத்தின் (ஏ ஆர் சி ஐ) மேம்பட்ட முலாம்களின் மையத்தை சேர்ந்த விஞ்ஞாளுள், டாக்டர் நிதின். பி வசேகர் தலைமயிலான குழு கண்டுபித்துள்ளது. வழக்கமான நேரடி மின்னோட்டத்தின் மூலம் பூசப்படும் குரோமியம் பூச்சுகளுக்கு பதிலாக நானோ வடிவம் உடைய நிக்கல் கலவை பூச்சுகளுக்கு, பல்ஸ்ட் கரண்ட் எலக்ட்ரோ பிளாட்டிங் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இச்செயல்முறை சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு அளிக்காத நிக்கல் மற்றும் டங்ஸ்டன் உலோகங்களை பயன்படுத்துகிறது. இதனிடையே அளிக்கப்படும் பல்ஸ்ட் கரண்ட் (700 - 1200 உயர் அழுத்த ஓல்ட்டேஜ்) அதிக கடினத்தன்மை கொண்ட நிக்கல் டங்ஸ்டன் கலவை பூச்சுகளின் நானோ-படிகமயமாக்கலுக்கு வழிவகுத்தது, இவ்விரண்டு உலோகத்தையும் எதிர்மின்வாய் மற்றும் நேர்மின்வாயாக மாற்றுகிறது.
இம்முறையில் பொருட்களின் மேல் பூசப்படும் நிக்கல் 700 மணிநேரம் உப்பத்தாக்கலை எதிர்த்து அரிப்பை தடுக்கிறது. மேலும் 500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாக்குபிடிப்பதோடு, குரோமியம் பூச்சுகளை விட இரு மடங்கு வாழ்நாள் இப்பொருட்களுக்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
280 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட நெகிழி குப்பி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இம்முறை வெற்றிகரமாக பயன்படுத்தபட்டுள்ளது. இதை வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கு தயாரிக்கப்படும் பொருட்களில் பயன்படுத்தலாம்.
இது குறித்த விவரங்களை அறிய nitin[at]arci[dot]res[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் டாக்டர் நிதின் பி வசேகரை தொடர்பு கொள்ளவும்.
கருத்துகள்