சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இயற்கை வரலாறு தொடர்பான தேசிய அருங்காட்சியகம், தேர்வு குறித்த விவாதம்- சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த அமர்வை ஹரியானா மாநிலத்தின் பள்ளி முதல்வர்களுடன் நடத்தியது
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணை அலுவலகமான இயற்கை வரலாறு தொடர்பான தேசிய அருங்காட்சியகம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை அடிப்படையில் தேர்வு குறித்த கலந்துரையாடல் அமர்வை ஹரியானாவைச் சேர்ந்த பள்ளி முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடத்தியது. அழுத்தங்களைத் தவிர்த்து குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று இந்த கலந்துரையாடலில் அறிவுறுத்தப்பட்டது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த 55 பள்ளி முதல்வர்கள் பங்கேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் செயல்படும் இயற்கை வரலாறு தொடர்பான தேசிய அருங்காட்சியகத்தின் மேற்குப் பிராந்திய மையமான ராஜீவ் காந்தி அருங்காட்சியகம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பசுமை உரையாடல், பசுமை உறுதியேற்பு, ரங்கோலி கோலப்போட்டிகள், எரிசக்தி சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு படங்கள் திரையிடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஜனவரி 13-ம் தேதி நடத்தியது. இதில், 2,643 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்