தமிழர் திருநாளில் SBI வங்கி நடத்தும் முதன்மைத் தேர்வுகள் கூடாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்காத நிர்வாகம்
தமிழர் திருநாளில் SBI வங்கி நடத்தும் முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று12 மணி நேரம் காத்திருந்து கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்திய நிலையில்
விடுதலைச் சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் ஆதரவளிக்க
தமிழ்நாடு முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார்.
ஆனால் இனிமேல் தேர்வுத் தேதியை மாற்ற முடியாது என்று கூறி விட்டது இந்திய ஒன்றிய நிதியமைச்சகம்.
20 நாட்களுக்கு முன்பே தெரிந்தும் கயமைத்தனத்தை கடைபிடிக்கிறது இந்திய ஒன்றிய அரசு. எனவும் தமிழர் திருநாளினை தேர்வு நாளாக்கி மக்களின் கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றியிருக்கிறீர்கள். எனவும்
13,000 தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் நாளை பொங்கல் கொண்டாடாமல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர். எனவும்
தமிழர்களின் பண்பாட்டையும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது என மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
கருத்துகள்