இந்தியாவின் சட்டபூர்வ அமைப்பான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகை குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தேசிய மகளிர் ஆணையம், மகளிர் நலனுக்கான கொள்கைகளை உருவாக்கி, இந்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் அமைப்பு. தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகை குஷ்பு சுந்தர் நியமிக்கப்பட்டதற்கு அவர், டிவிட்டரில் அனைவருக்கும், குறிப்பாக பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அரசியல், சமயம், வேலை வாய்ப்பில் மகளிர்க்கான உரிமைகளைக் காத்திடவும், வரதட்சணை, வன்கொடுமை, பணிச் சுரண்டல், காவல் நிலையக் கொடுமைகள் என பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணையத்தில் மகளிர் உரிமைகளுக்கான இராஷ்டிர மஹிளா எனும் மாதாந்திர செய்தி இதழை, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தேசிய மகளிர் ஆணையம் வெளியிடுகிறது .நடிகை குஷ்பு சுந்தர், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.