13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்தும் மாற்றம் செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றிய கோயமுத்தூர் பாஜக முகமானவர். மத்திய அரசின் அகில இந்திய கயிறு வாரியத் தலைவராகவும் உள்ளார். தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் மற்றும் -புதுச்சேரி யூனியன் பிரதேச ஆளுநராகத் தமிழ்நாட்டின் தமிழிசை சவுந்தரராஜன், மணிப்பூர் மாநில ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டு. தற்போது வரை மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசன், நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான இரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநரான கோஷ்யாரி பல சர்ச்சைகளில் சிக்கியதால் தம் பதவியை ராஜினாமா செய்தது ஏற்கப்பட்டு ஜார்க்கண்ட் ஆளுநரான ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டின் சி.பி. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.லெப்டினல். ஜெனரல் திரிவிக்ரம் பிரனாய்க், அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளுநராகவும், அஸ்ஸாம் மாநில ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியாவும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக பிரதாப் சுக்லாவும் நியமிக்கப்பட்டுள்ளார்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆளுநராக இருந்த அர்லேகர், பீகார் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த சௌகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அப்துல் நசீர், ஆந்திரப்பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவராந அப்துல் நசீர்.
13 புதிய ஆளுநர்கள் நியமனத்தின் விவரம்:
ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் கெய்வால்யா த்ரிவிக்ரம் பர்நாயக்- அருணாச்சல பிரதேசம்
லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம்
சிபி ராதாகிருஷ்ணன் - ஜார்க்கண்ட்
ஷிவ் பிரசாத் ஷுக்லா- இமாச்சல பிரதேசம்
குலாப் சந்த் கட்டாரியா- அஸ்ஸாம்
அப்துல் நஸீர்- ஆந்திரா
ஆந்திரா ஆளுநர் .பிஸ்வ பூஷன் ஹரிசந்தன்- சத்தீஸ்கர்
சுஷ்ரி அனுஷியா உய்க்கே - மணிப்பூர்
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து
பீகார் ஆளுநர் பாகு சவ்ஹான்- மேகாலயா
இமாச்சல பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்- பீகார்
ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ்- மகாராஷ்டிரா
அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா- லடாக்
கருத்துகள்