பாதுகாப்பான குடிநீர் வசதி
2024 ஆம் ஆண்டு இந்திய கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நீண்டகால திட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு வீடுகளுக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
இந்தத் திட்டத்தை தொடங்கிய 2019 ஆம் ஆண்டில் 3.23 கோடி கிராமப்புற வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது 02.02.2023 ஆம் தேதி வரையிலான கடந்த மூன்றரை ஆண்டுகளில் 7.83 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளில் குழாய் வாயிலான குடிநீர் வசதி வழங்கப்பட்டது. அதாவது நாட்டிலுள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில் சுமார் 11.07 கோடி வீடுகளில் இந்த குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.பிரகலாத் சிங் பட்டேல் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான தகவலில் இதனைத் தெரிவித்துள்ளார்.அங்கன்வாடி மையங்களில் தூய்மைக் குடிநீர் இணைப்பு
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்காக அக்டோபர் 2, 2020 அன்று, நீர்வள இயக்கத்தின் கீழ் நாடு தழுவிய இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 3.2.2023 அன்றைய நிலவரப்படி, 2019 ஆகஸ்ட் மாதம், பள்ளிகளில் 4.47 லட்சம் குடிநீர் இணைப்புகள் (43%) இருந்த நிலையில், தற்போது 8.99 லட்சமாக குடிநீர் இணைப்புகளாக (87%) அதிகரித்துள்ளன. 2019 ஆகஸ்ட் மாதம், அங்கன்வாடி மையங்களில் 4.43 லட்சம் குடிநீர் இணைப்புகள் (40%) இருந்த நிலையில், தற்போது 9.22 லட்சம் குடிநீர் இணைப்புகளாக (82%) அதிகரித்துள்ளன.
இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
கருத்துகள்