மறைந்தார் வாணி ஜெயராம். சென்னை நுங்கம்பாக்கம்
ஹாடோஸ் சாலையில் அவரது இல்லத்திலிருந்து கீழே விழுந்த அதிர்ச்சியில் மரணம் எனத் தகவல். பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் வயது முதிர்வில் தடுமாறி விழுந்து காலமானார். 78 வயதாகும் வாணி ஜெயராம் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
அந்த மகிழ்ச்சி அலைகள் ஓயும் முன்பே அவரது மறைவுச் செய்தி அவரது இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் தலையில் அடிபட்டு மரணமடைந்திருந்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடியவரின் இசைப்பயணம் 1971 ஆம் ஆண்டு குட்டி ௭னும் ஹிந்தி மொழி திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று வரை நான்கு தலைமுறைகளாகப் பின்னணிப் பாடகியாகப் காணம் பாடி வந்த அந்த வாணம் பாடி காலமானதின்று
இந்தியத் திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார். வெளிநாடுகள் பல சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974 ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭னும் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ். விசுவநாதன் இசையில் பாடியவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.
இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காலி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது, அந்த மகிழ்வு நிறைந்து ஓயும் முன்பே அவரது மறைவுச் செய்தி திரைப்படத்துறையினரையும் அவரது இசை ரசிகர்களையுமஹ அதிர்ச்சியில் ஆழ்த்தியது. .
வாணி ஜெயராம் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்து விட்டுச் செல்வார். வாணி ஜெயராம் உயிரிழந்தது குறித்து
செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பணியாளர், மலர் "இன்றைய தினம் வழக்கமாக வீட்டிற்கு வந்த போது கதவைத் திறக்கவில்லை. கதவை பலமுறை தட்டியும் திறக்காமல் போகவே சந்தேகப்பட்டு கதவை உடைத்துக் கொண்டு திறந்தோம். வீட்டிற்குள் மயங்கிய நிலையில் வாணி ஜெயராம் இருந்தார். அவரது நெற்றிப்பொட்டில் அடிபட்டிருந்தது. இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்கள்" எனக் கூறினார். மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து என்றும் இசை மழையாய் வாழ்வார்.
"தொலைபேசியில் கூட வாணியின் குரல் தெய்வீகமாக ஒலிக்கும்" என்ற கவியரசர் கண்ணதாசன் வார்த்தை இது. 80-90 களில் அன்றய இளைய தலைமுறை ஆலாபனையில் ஆகாயத்து நட்சத்திரங்களை நமக்குள் பனிப்பூக்களாக உதிர்த்த குரல்.
"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்" என நம் ஆழ்மனத்தைத் தொட்டெழுப்பிய குரல்.
"எனக்கொரு பூமாலை நீ வாங்க வேண்டும்"
அது எதற்கோ என நம்மைக் கலங்கடித்த குரல் மெளனமானதே.
காற்றெல்லாம் உங்கள் குரலும் மக்கள் கண்ணீரின் ஈரமும் .
போய் வாருங்கள் கலை வாணி...
கருத்துகள்