முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வந்தது, மோதும் கட்சியில் மோதல் காட்சிகள்

ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் 


நிலை பிப்ரவரி  27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி மாதம் ஆரம்பித்து பிப்ரவரி மாதம்  7 ஆம் தேதி வரை நடந்ததில் மொத்தம் 121 வேட்புமனுக்கள் தாக்கலானதன் பின்பு நடந்த வேட்புமனு பரிசீலனையில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதில். காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நா.த.க.உள்ளிட்ட அரசியல் கட்சிகள்,மற்றும்  சுயேச்சை வேட்பாளர்கள் 50 பேர் தேர்தல்  போட்டியில் உள்ளனர்.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  அமமுக வேட்பாளர் அரசியல் காரணங்களுக்காக தேர்தல் சின்னத்தைக் காரணமாகக் கூறி வாபஸ் பெற்ற நிலையில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தென்னரசின் மகன் கலையரசன் உட்பட இரண்டு பேர் நேற்று தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் இன்று தனது வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார். மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்குச் சின்னம் ஒதுக்கப்படும் சுயேச்சைகளுக்குச் சின்னம் ஒதுக்க 191 சின்னங்களை தேர்தல் ஆணையம் பட்டியல் படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அதிமுக வேட்பாளர் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், ‘ஜனநாயகக் கூத்து நடந்திருக்கிறதென ஓ.பன்னீர் செல்வம்  ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினரான தேனி மாவட்டம் அரண்மனைபுதூரைச் சுப்புராஜ் செய்தியாளரிடம், “ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராகத் தென்னரசை தேர்வு செய்வது சம்பந்தமாக கட்சியின்  அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பெயரில் எனக்கு அனுப்பப்பட்ட பிப்ரவரி 4-ஆம் தேதியிட்ட கடிதமும், வாக்குச் சீட்டும் பிப்ரவரி 6-ஆம் தேதி இரவு தான் என் கைக்குக் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு 7 மணிக்குள் சென்னையிலிருக்கிற அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வைத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கிட்ட கொடுக்கணும்னு குறிப்பிட்டிருந்தாங்க. அது எப்படி பிப்ரவரி 6-ஆம் தேதி கைக்குக் கிடைச்ச வாக்குச்சீட்டை பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு கொடுக்க முடியும்? இந்தக் கொடுமையை அதிமுக கட்சிக்காரங்க எல்லாரும் வேடிக்கை பார்க்கிறாங்க. நாங்களும் சிரிச்சிக்கிட்டு அதிமுக கட்சியை எப்படியெல்லாம் நாசமாக்குறாங்கன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான்.எனக்குத் தெரிஞ்சு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லிக்குப் போகிற அவசரத்தில், உள்ளூரில்  (சென்னை) இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்ட வேணும்னா அஃபிடவிட்ல (ஒப்புதல் படிவங்கள்) கையெழுத்து வாங்கிருப்பாங்க. அதுவும் ஆங்கிலத்தில்  இருந்த அஃபிடவிட்டில் புரிஞ்சு கையெழுத்து போட்டாங்களோ, புரியாம கையெழுத்து போட்டாங்களோ? மற்றபடி, அவங்களுக்கு வேண்டிய பொதுக்குழு உறுப்பினர்கள் தானேன்னு, அஃபிடவிட்டில் ஃபோர்ஜரி கையெழுத்து போட்டுத்தான் தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருப்பாங்கனு எனக்குத் தோன்றுகிறது .


இது எடப்பாடி கே.பழனிச்சாமி சர்க்கிளில் இருந்தே எனக்குக் கிடைச்ச தகவல்.இன்னொரு கொடுமையும் நடந்திருக்கு. அதிமுக  அவைத்தலைவர் அனுப்பிய லெட்டர்ல, தென்னரசை முன்மொழிந்தார்ங்கிற இடத்துல எடப்பாடி கே பழனிசாமியின்னு பெயரை மட்டும் தான் போட்டிருந்தாங்க. இடைக்காலப் பொதுச்செயலாளருன்னோ, இணை ஒருங்கிணைப்பாளருன்னோ பெயருக்கு முன்னால போடவேயில்லை. சட்டத்தை மதிக்கணும்கிற பயத்தில் தான், தமிழ்மகன் உசேன் எடப்பாடி கே.பழனிசாமி கட்சியில என்ன பொறுப்பில இருக்காருங்கிறதைப் போடவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை  அவருடைய அறிக்கையில் நன்றி சொல்லும் போது, இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமின்னு தான் போட்டிருக்காரு.

அதேநேரத்துல, பொறுப்பு எதையும் போடாம அண்ணன் ஓ.பன்னீர்செல்வம்னு போட்டிருக்காரு. எந்த அளவுக்கு ஓ.பன்னீர் செல்வத்துக்கு  எதிரான மனநிலையில் அண்ணாமலை இருக்கிறாரு பாருங்க.” எனக் குமுறினார். பால் காய்ச்சும் போது பொங்கும் இதுவரை பச்சைத் தண்ணீராக இருந்தது எல்லாம் இப்போது நான்கு வருடம் முடிந்து பொங்குவது தான் தற்போது அரசியல் அறிந்த மக்கள் பேசுவது 

‘ஓ.பனனீர் செல்வமும் எடப்பாடி கே. பழனிச்சாமியும் எதுக்காக பிரிஞ்சு நின்னு எதற்காக நீதி மன்றம் வழக்கு என அலையணும்? இதெல்லாம் எந்த விதத்துலையும் கட்சிக்கு நல்லது இல்ல..’ என்று தீவிர அதிமுக தொண்டர்களும் புலம்புகின்றனர்.                   




    உச்ச நீதிமன்ற உத்தரவிலேயே, இந்தத் தீர்ப்பு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே இது எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பாஜக வைத்த பரிட்சை தான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், இதில் தென்னரசு வென்றால் அது பாஜகவின் வெற்றியாகப் பார்க்கப்படும் தோல்வியடைந்தால் அது எடப்பாடி கே. பழனிச்சாமிக்கான தோல்வியாகப் பார்க்கப்படும் இந்த இடையீட்டு மனு தீர்ப்புக்கும் பிரதான வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், கட்சி முழுமையாக எடப்பாடி கே. பழனிசாமி கைக்குச் சென்றுவிட்டது எனச் சொல்ல முடியாது. தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் எடப்பாடி கே.பழனிச்சாமிக்குக் கிடைத்திருக்கிறது. அது அவருக்கு சாதகம் . அமமுக வாபஸ் ஆனதில் கூட தெளிவான அரசியல் உண்டு, தொடக்கத்திலிருந்தே ஓ.பன்னீர் செல்வம் , இந்த ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டினார். யார் பின்னாலாவது சென்று ஒளிந்துகொள்ள நினைத்தார். வாபஸ் பெறவேண்டும் என்ற எண்ணத்தோடும் தான் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு   வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். பாஜக போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும்  சொன்னார். தான் பின்வாங்குவதை முன் கூட்டியே தெள்ளத் தெளிவாகவே காட்டினார் ஓ.பன்னீர் செல்வம் . அது தவறான நடவடிக்கை. அதில் ஓ.பன்னீர் செல்வம்  பலவீனமாக இருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமானது. இரு தரப்புக்கும் தனிச் சின்னம் கிடைத்து போட்டியிட்டாலும் தேர்தலில் மிகக்குறைவான வாக்குகள் கிடைத்தால் ஓபன்னீர் செல்வம் நிலை பரிதாபம் உண்மை பட்டவர்த்தனமாகி விடும்.



அந்த வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தான் எடப்பாடி கே.பழனிசாமி விரும்பினார். கடந்த தேர்தலைப் போலவே தமாகா வேட்பாளரை நிறுத்திவிட்டு எடப்பாடி கே.பழனிச்சாமி  விலகியிருக்கலாம். அது வெற்றியோ தோல்வியோ அது ஜி.கே.வாசனைச் சேரும் ஆனால், அவர்களிடம் பேசி தனது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தார். தனது வலிமையை நிரூபிக்க இந்த ஈ்ரோடு இடைத்தேர்தலை பயன்படுத்த நினைத்தார். விவசாயி எடப்பாடி கே.பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வம்  தரப்பு போட்டியாக நின்றாலும் அவருக்கு பின்னடைவு தான் ஏற்படும், கொங்கு என்பது வெள்ளாளக் கவுண்டர்கள் மட்டுமல்ல அருந்ததியர் மற்றும் முதலியார் உள்ளிட்ட பல சமூகம் சார்ந்த  கலவை ஈரோடு கிழக்கு இதில் தேமுதிக வாக்கு கணிசமான வாங்கும் என நம்பப்படும் நிலை உள்ளன, கொங்கு மண்டலம் நமக்கு சாதகமானது என கணக்குப் போட்டுத்தான் களமிறங்கினார் எடப்பாடி கே.பழனிசாமி. ஆனால் இருவருமே முன்னாள் முதல்வர்கள். ஒருவருக்கு ஒருவர் அதிகார போட்டியில் இருந்து விலகக் கூடாது.என பலர் நினைத்தால் அது தவறு முதலில் சறுக்கும் நபர் ஓ.பன்னீர் செல்வம் தான்.  இருவருக்கும் இன்னும் எத்தனையோ மேல்முறையீடு வாய்ப்புகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றத்தில் இருக்கின்றன. 


வருகிற நாடாளுமன்ற தேர்தல் அடுத்த சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரை தனது செல்வாக்கை நிரூபிக்க தனித் தனித்த சின்னத்தில் நிற்பதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுகிறது அதில் தனது திறமையை நிரூபிக்க காலங்கள் இருக்கிறது.

இருவரும் இனி இணைந்து செயல்படுவது இருவரில் ஒருவரால் வீழ்த்தப்படலாம்.

இருவருக்குமே அரசியல் சூனியம் தான் என்பதை ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் உணர்த்தும் போது தெரியும் என அக்கட்சியின் தொண்டர்கள் பேசுவது நமக்கு கேட்கிறது இப்போது தற்காலிகமாக இரண்டு இலை ஒரு காம்பில்  உள்ளது 

ஆதலால் மோதுங்கள். தனிச்சின்னத்தைப் பெற்று அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை மக்கள் மன்றம் காணுங்கள்.

எதிர்காலத்தில் ஆளுங்கட்சி-எதிர்கட்சி என்பது பாஜக-திமுக என்ற போட்டி களத்தை வளரும் தலைமுறையில் மாறிவிட்டது .



மறந்து விடாதீர்கள் இருவருமே முன்னாள் முதல்வர்கள் தான் தலைமை ஆசிரியரான ஒருவர் அடுத்த பதவி உயர்வை தானே விரும்ப வேண்டும் துணை ஆசிரியராக தன்னிடம் இருந்தவர் தலைமை ஆசிரியராக மாறும் போது அப்போதே ராஜினாமா செய்து வெளியேறத ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் இனி தலைமை இடத்திற்கு வர முடியுமா என்பது தற்போது ஈரோட்டில் வெற்றி தோல்வியே முடிவு செய்யும் எனவும் மக்களின்  பேச்சாக  உள்ளது சட்டமும் மேல்முறையீடும் இருவருக்கும் அதிகமாக இருக்கிறது. சண்டையிடுங்கள் சமாதானம் எதற்கு

"உச்ச நீதிமன்றம் நம்பிக் கொடுத்தது.. ஆனால் நேர்மை தவறி தவறு செய்துவிட்டார் தமிழ் மகன் உசேன்" 

என பாமக முதல் பல கட்சியில் இருந்து வந்த  ரவீந்திரன்_துரைசாமி. கூறுகிறார் அவர் இப்போது அரசியல் விமர்சகராம் அய்யோ பாவம் விட்டால் போதும் என்ற நிலையில்‌ ஈரோடு கிழக்கில் தென்னரசு வேட்பாளர் என்று சொல்ல தமிழ் மகன் உசேனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?



என  எம்ஜிஆர் காலம் கண்ட முன்னால் அமைச்சர் பண்ருட்டி.எஸ் ராமச்சந்திரன்.  கருத்து உச்ச மன்றத்தின் தீர்ப்புப்படி அவைத்தலைவர் நடந்து கொள்ளவில்லை என பண்ருட்டி எஸ் ராமச்சந்திரன் குறித்த உண்மைத் தன்மை தெரிந்தவர்களுக்கு தான் பின்வரும் ஆபத்துக்கள் புரியும் அன்வர்ராஜாவை விட தமிழ்மகன் உசேன் ஒன்றும் பெரிய ஆளோ அல்லது ஆளுமையோ  இல்லை.என்பதே அக் கட்சியினர் சிலர் கருத்து  ஈரோடுகிழக்கு 

அண்ணாமலை எங்களுக்கு உத்தரவு போட முடியாது.


எனப் கர்நாடகா புகழேந்தி இப்போது கூறுவதும் அரசியல் தான்,  இரட்டை இலைச் சின்னம் கொடுத்த எம் ஜிஆர் மாற்றும் அக் கட்சியை  வளர்த்த ஜெ.ஜெயலலிதாவின் படம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அங்கு களமாடும் கட்சி எது என்பதை தேர்தல் முடிவில் காணலாம்.  கட்சி பாதுகாக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர் செல்வம் தான் முழுக் காரணமெஎன வழக்கறிஞர் மனோஜ் பாண்டியனின்  கருத்து அவரது தந்தை பி எச்.பாண்டியன் மற்றும் அக்கட்சி முன்னால் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்  சசிக்கலா புஷ்பா ஆகியோர் ஜெ.ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நடந்ததை அக்கட்சியின் இரத்தத்தின் இரத்தங்கள் மறக்கவில்லை 


பணம் இந்த உலகத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து இருக்கிற வியாபாரி. அதனிடம் விலைபோகாத சரக்குகளே கிடையாது." - இது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தமான் காதலி படத்தில் பேசிய வசனம்.  

நல்ல அனுபவ ரீதியான வசனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...