புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு பள்ளி மாணவிகள் கரூர் வட்டம் மாயனூர் கதவணையில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலை பலரையும் கவலையடைய வைப்பதாகும் ,
தனியார் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளில் நான்கு பேர், இடைவேளை நேரத்தில் குளிக்கச்சென்று நீச்சல் தெரியாத நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.
மாணவிகளை அழைத்து சென்ற அரசு பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பொறுப்பற்ற முறையில் பாதுகாக்காமல் கண்காணிப்பின்றி அலட்சியமாகச் செயல்பட்டதையே இச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.
உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் சக மாணவிகளும் மிகுந்த கவலை கொண்ட நிலையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலா மற்றும் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும் போது
அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்கும் வகையில் செயல்படுவதற்கான கடுமையான உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு, அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அணைத்து கட்சி மற்றொரு சமூகத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள்