துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் பாதிப்பு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அவசர உதவி
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ளதில் மொத்தம் 20,000 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சியான தகவலைத் தெரிவிக்கிறது.
அடுத்தடுத்து நதக்கும் நில அதிர்வுகளுக்கு மத்தியில் பன்னாட்டு உதவியுடன் துருக்கியில் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை மீட்டு வருகின்றனர்.
அதில் மூன்றாவது நிலநடுக்கம் மட்டும் ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவாகியது அடுத்தடுத்துப் பேரழிவுகள் உருவாகின. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல முறை துருக்கியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக இடிந்தும் விழுந்தன.சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம் என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; நிலநடுக்கத்தால் சிரியாவும் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் “சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்”.துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தையடுத்து தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்கு அளிக்குமாறு பிரதமர் இன்று அறிவுறுத்தியதையடுத்து உடனடி நிவாரண வழிமுறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது
துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தையடுத்து தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்கு அளிக்குமாறு பிரதமர் இன்று அறிவுறுத்தியதையடுத்து உடனடி நிவாரண வழிமுறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா கூட்டம் நடத்தி விவாதித்தார். தேசிய பேரிடர் மீட்புப்படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்களை நிவாரணப் பொருட்களுடன் உடனடியாக அனுப்பி துருக்கி அரசுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 100 பேர் கொண்ட 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான மருந்துகளுடன் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் தயாராக உள்ளது. அங்காராவில் உள்ள இந்திய தூதரகம், இஸ்தான்புலில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
இக்கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை, பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்