முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுதானியங்களின் ஆரோக்கிய பலன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள்

சிறுதானியங்களின் ஆரோக்கிய பலன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் பி.மூர்த்தி


கேழ்வரகு, கம்பு போன்றவை ஏழை மக்களின் உணவு என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். இப்போது வசதி படைத்தவர்கள் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிறுதானியங்களை மருந்தாக நினைத்து பயன்படுத்துகின்றனர். சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை. அவற்றை தொடர்ந்து உணவாக உண்டு வந்தால் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.


புதிது புதிதாக நோய்கள் நம்மைத் தாக்க காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான். சிறுதானியங்களையும் சேர்த்துக் கொண்ட உணவுதான் சிறந்தது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்துள்ள " அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்த எட்டு நாட்கள் புகைப்படம் & டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய போது அமைச்சர் மூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.


பல்லாயிரக்கணக்கான தியாகிகள் தம் இன்னுயிரை நீத்து நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்துள்ளனர் . அவர்களின் தியாகத்தை நாம் காலமெல்லாம் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மூலமும் அந்தந்த மாவட்டத்தில் வெளித்தெரியாத தியாகிகள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் திரு. மூர்த்தி மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு முக்கிய பங்கு உண்டு. மகாத்மா காந்தி ஐந்து முறை மதுரை வந்துள்ளார். ஜாலியன் வாலா பாக் படுகொலை போன்ற கொடுஞ்செயல் பெருங்காம நல்லூரில் நடந்துள்ளது. காந்தி அரையாடைக்கு  மாறியது மதுரையில் தான். மாணவர்கள் வரலாற்றைப் படிப்பதும் தெரிந்து கொள்வதும் முக்கியம் என்று ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனியுரை நிகழ்த்தினார்.

மத்திய மக்கள் தொடர்பக மண்டல இயக்குநர் திரு.ஜெ.காமராஜ் நோக்கவுரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் திரு.த.விவேகானந்தன் கருத்துரை ஆற்றினார்.

மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு.டி.நாகராஜன், 31ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு வி.முருகன் ஆகியோரும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் திரு மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

கண்காட்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய கள அலுவலகம், அஞ்சல் துறை, ஆதார் திருத்தம், காசநோய் பிரிவு, பொது சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயா மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் மத்திய மக்கள் தொடர்பகத்தில் பதிவு பெற்ற புனிதம் கலை மேம்பாட்டு மைய கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக மத்திய மக்கள் தொடர்பக புதுச்சேரி துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்றார். நிறைவில் திருநெல்வேலி கள விளம்பர அலுவலர் திரு.பி.கோபகுமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர்கள் திரு போஸ்வெல் ஆசிர் (மதுரை), எஸ்.வீரமணி (புதுச்சேரி) மற்றும் பி.வேல்முருகன் (திருநெல்வேலி) ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...